ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குப் படைக்க ஏற்ற, சுவையான மற்றும் ஆரோக்கியமான செட்டிநாடு பால் கொழுக்கட்டை செய்வதற்கான எளிய செய்முறை.
தேவையான பொருட்கள்
மாவு பிசைய
- கொழுக்கட்டை / இடியாப்ப மாவு – 1 3/4 கப்
- உப்பு – 1/2 டீஸ்பூன்
- சுடுநீர் – தேவையான அளவு
தேங்காய் பாலுக்கு
- துருவிய தேங்காய் – 2 கப்
- ஏலக்காய் – 3
- வெதுவெதுப்பான நீர் – தேவையான அளவு
வெல்லப் பாகு காய்ச்ச
- பொடித்த வெல்லம் – 1 1/4 கப்
- தண்ணீர் – 1/4 கப்
செய்முறை
Step 1: ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். சுடுநீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கிளறி, பின்னர் கைகளால் மென்மையாகப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாகவோ அல்லது நீளமான வடிவத்திலோ உங்கள் விருப்பப்படி உருட்டித் தட்டில் வைத்துக்கொள்ளவும்.
Step 2: மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்டி முதல் மற்றும் இரண்டாம் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.
Step 3: அடிகனமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். நீர் கொதித்ததும் உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு மிதமான தீயில் மூடி வைத்து 3-4 நிமிடம் வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து லேசாகக் கிளறி, மீண்டும் 5 நிமிடம் வேகவைக்கவும்.
மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..
Step 4: கொழுக்கட்டை நன்கு வெந்ததும், வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீரைக் கலந்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்கவிடவும். வெல்லம் கொதித்த பிறகு தேங்காய் பாலை ஊற்றிக் கிளறவும். பால் லேசாகச் சூடானதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும் (அதிகம் கொதிக்க விடக்கூடாது). இறுதியாகச் சிறிது துருவிய தேங்காயைத் தூவினால், ருசியான ‘செட்டிநாடு பால் கொழுக்கட்டை’ தயார்!

