கோவை மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சுங்கம்–2 கிளையில், அரசு பேருந்து நடத்துனர் சரவணன் மற்றும் செக்கிங் இன்ஸ்பெக்டர் பூபதி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பணியின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கொன்றனர்.
பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு.. மானியம் மற்றும் கடன் வசதிகளுடன் தமிழக அரசின் புதிய திட்டம்..!
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

