Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»டாஸ்மாக் தனியார்மயமாகிறதா?.. அரசாணையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் விளக்கம்..!
    கோவை

    டாஸ்மாக் தனியார்மயமாகிறதா?.. அரசாணையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் விளக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 7, 2026Updated:June 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    minister-vignesh-tasmac-corruption-coimbatore-speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது–மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டியளித்துள்ளார்.

    கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மையை கொண்டு கையில் அச்சு வைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கைஅச்சை பதிந்து முதல் உறுதிமொழியை பதிவு செய்தார்.

    ‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல்.. இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்..!

    நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களின் முக்கிய இலக்கு. போதைப் பொருட்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த உள்ளோம்” என்றார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளதால், அந்த சங்கிலியை முழுமையாக உடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப் பொருட்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

    டாஸ்மாக் நிர்வாகம் குறித்து பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதைப் போல நாங்கள் செயல்பட மாட்டோம். டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும் புரட்சிகரமான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளோம். தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.1,000 கோடி அளவிலான முறைகேடுகளை தடுத்து நிறுத்தியுள்ளோம். இதற்கான அரசாணை ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

    டாஸ்மாக் துறையில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், “மாதந்தோறும் ரூ.100 கோடி வரை தனிநபர் கணக்குகளுக்கு சென்றதாக தகவல்கள் உள்ளன. இந்த நிலை இனி தொடராது. எந்த துறையிலும் ஊழல் அனுமதிக்கப்படாது.

    ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.மேலும், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியலுக்கு மேல் பணம் வசூலிக்க முடியாத சூழல் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


    “அதிகாரிகளிடம் பணம் வசூல் செய்யும் முறை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. அதனை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஊழியர்கள் நேர்மையாக பணியாற்ற அனுமதிக்கப்படாத சூழலை மாற்றியமைக்க முயற்சி செய்கிறோம்” என்றும் கூறினார்.
    மேலும், இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்றும் அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்தார்.

    “துறையில் நடைபெற்ற அனைத்து தவறுகளையும் ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருவோம். ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டுகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார்.

    இறுதியாக, “டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.10 கூட வாங்க வேண்டாம். வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகார்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். முன்னதாக பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி அமைச்சரிடம் மனு அளித்தார். அப்போது, கேரளாவில் கள் இறக்குவது போல் தமிழகத்திலும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore local political updates Government order June 5 2026 Minister Vignesh Coimbatore press meet Minister Vignesh speech on TASMAC Rathinam College drug awareness event Sambil Balaji TASMAC reforms TASMAC corruption charges Tamil Nadu அமைச்சர் விக்னேஷ் கோவை பேட்டி கோவை உள்ளூர் அரசியல் செய்திகள் செந்தில் பாலாஜி டாஸ்மாக் விவகாரம் டாஸ்மாக் ஊழல் அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் கடைகள் மூடல் 2026 போதையில்லா தமிழகம் உறுதிமொழி ரத்தினம் கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.