Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல்.. இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்..!
    கோவை

    ‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல்.. இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026Updated:June 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    chennai-rowdy-petrol-bomb-attack-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திண்டுக்கல் ‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல்: இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் வாசலில் பீர் பாட்டில்களை வீசிய கும்பல். இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர் பிரேக் அப் செய்ததால் ஆத்திரம் அடைந்த சென்னை ரவுடி ஒருவன், தனது கூட்டாளிகளுடன் வந்து காதலியின் வீட்டின் மீது பெட்ரோல் மற்றும் எரியும் எண்ணெய் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை வீசி ‘குண்டு வைப்பு’ பாணியில் தாக்குதல் நடத்திய சம்பவம் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில், அதில் ஒரு தனிப்படையினர் சேலத்திலும், மற்றொரு தனிப்படை தற்பொழுது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கள்ளிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் இளம் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 84/2026-ன் கீழ் தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி படிக்கும் மகளுக்கு, அவரது கிளாஸ்மேட் மூலம் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் (30) என்ற ஆசாமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) சமூக வலைத்தளம் வழியாகத் தீவிரக் காதலாக மாறி உள்ளது.

    டிரைவர் இருக்கை அருகே இளம்பெண் செய்த காரியம்.. விபத்து நடக்கும் முன் ஆக்ஷன் எடுங்க..!

    இந்த ‘லவ் டிராக்கைப்’ பற்றிப் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் அந்த நபரின் பின்னணி குறித்து விசாரித்து உள்ளனர்.அப்போது அவர் காதலன் கார்த்தி சாதாரண ஆள் இல்லை என்பதும், கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் பயங்கர குற்ற வழக்குகளில் சிக்கி குண்டாஸ்’ (Goondas Act) சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைக் கம்பிகளை எண்ணிய ‘ஸ்கெட்ச்’ ரவுடி என்பதும் அம்பலமானது.
    காதலனின் இந்த பயங்கர குற்றப் பின்னணியை அறிந்து அதிர்ந்து போன பெற்றோர், தங்களின் மகளின் காதலுக்குக் கடுமையான எதிர்த்து உள்ளனர்.

    பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்ணும், ரவுடி கார்த்தியுடனான அனைத்து தொடர்புகளையும் கட் செய்து, ‘பிரேக் அப்’ செய்து ‘ உள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சென்னை ரவுடி கார்த்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களில் கள்ளிக்க நாயக்கன்பாளையத்தில் உள்ள காதலியின் வீட்டிற்கு சென்று உள்ளார்.
    அவர்கள் முன்னரே ப்ளான் செய்து கொண்டு வந்து இருந்த, எரியக் கூடிய ஆயில் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களைப் பற்ற வைத்து, இளம் பெண்ணின் வீட்டின் நுழைவாயிலை நோக்கி வீசி எறிந்து ‘பெட்ரோல் குண்டு’ தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இந்த அதிர்ச்சித் தாக்குதலில் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணி வைக்கும் ஸ்டாண்ட் (Footwear Stand) தீப்பற்றி எரியத் தொடங்கியது. நல்வாய்ப்பாக இந்த விபரீத சம்பவத்தில் யாருக்கும் எந்தவித உடல் காயமும் ஏற்படவில்லை.
    இதுகுறித்த அவசரத் தகவல் கிடைத்ததும், தொண்டாமுத்தூர் காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்து மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக கார்த்திக்கு உள்ளிட்ட நண்பர்கள் நான்கு பேர் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராம் காதலால் அரங்கேறிய இந்த ‘பீர் பாட்டில் குண்டு’ விவகாரம் குறித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய சென்னை ரவுடி கார்த்தி மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிக்க சென்னை மற்றும் சேலம் சென்று இரண்டு தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஒரு தனிப்படையினர் காவல்துறையினர் தற்பொழுது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore local crime updates Instagram love break up dispute Kallikanaickenpalayam crime news Kerala Palakkad police search hunt Rowdy Karthi alias Mariappan Chennai Thondamuthur petrol bomb attack 2026 Thondamuthur police station FIR
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026

    டாஸ்மாக் தனியார்மயமாகிறதா?.. அரசாணையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் விளக்கம்..!

    June 7, 2026

    டிரைவர் இருக்கை அருகே இளம்பெண் செய்த காரியம்.. விபத்து நடக்கும் முன் ஆக்ஷன் எடுங்க..!

    June 6, 2026

    சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடுத்த நகர்வு.. நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

    June 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.