கோவை சூலூர் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது, நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சூலூர் பகுதியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இரண்டு நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.
உடல்நிலை சூப்பராக உள்ளது… சென்னை கிளம்புகிறேன்.. அமைச்சர் ஓப்பனாகப் பேசிய செங்கோட்டையன்..!
இதன் ஒருபகுதியாக, இன்று சூலூர் காவல் நிலையத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளின் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP), துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் சூலூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கோப்புகளைத் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு வருவதால், மிக விரைவில் இந்த குற்றப்பத்திரிகையானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

