மாம்பழ சீசன் வந்தாச்சு அப்புறம் என்ன மார்க்கெட்டுக்கு போய் மாம்பழத்தை வாங்கி பல விதமான டிஸ்க்களை செய்து பார்க்கத்தான் பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. மாம்பழ சீசனில் வெறுமனே மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவதைவிட அந்த மாம்பழங்களை கொண்டு ஐஸ்கிரீம், மில்க் ஷேக், பூட்டிங், கேசரி, பாயாசம் என பலவிதமான ரெசிபிகளை நாம் செய்திருப்போம். அந்த வகையில், மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வீடே மணக்கும் மாம்பழ லட்டு.. மிஸ் பண்ணக்கூடாத ஸ்வீட் வெரைட்டி..!
தேவையான பொருட்கள்
கன்டென்ஸ் மில்க் செய்வதற்கு
- 500 மில்லி பால்
- ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ
- ஒரு கப் சர்க்கரை
ஐஸ்கிரீம் செய்வதற்கு
- ஐந்து அல்போன்சா மாம்பழம்
- 400 மில்லி ஸ்வீட் விப்பிங் கிரீம்
செய்முறை
Step 1: முதலில் ஒரு கடாயில் 500 மில்லி பாலை ஊற்றி அடுப்பில் வைத்து அதில், ஒரு டீஸ்பூன் குங்கும பூவே கைகளால் நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், அதில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி மிதமான தீயில் வைத்து பால் நன்றாக கெட்டியாகும் வரை விட வேண்டும்.
Step 2: ஒரு 15 நிமிடத்தில் பால் கொதித்து விடும். பால் ஓரளவுக்கு கெட்டியானதும் அதை இறக்கி குளிர வைத்தால், கன்டென்ஸ் மில்க் தயார். பின்பு மிக்ஸர் ஜாரில் ஐந்து மாம்பழங்களின் தோலை நீக்கிவிட்டு துண்டு துண்டுகளாக எடுத்துக்கொண்டு அத்துடன் தயாரித்து வைத்துள்ள கண்டன்ஸ் மில்க்கை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
Step 3: பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் குளிர்ச்சியான ஸ்வீட் விப்பிங் கிரீமை எடுத்துக்கொண்டு எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்றாக நுறைக்கும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், அதில் அரைத்து வைத்துள்ள மாம்பழக் கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
Step 4: விருப்பமான பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள ஐஸ்கிரீமை சேர்த்து கவர் கொண்டு மூடி ஃப்ரீசரில் 12 மணி நேரம் வைத்திருந்தால் சுவையான மாம்பழ ஐஸ் கிரீம் ரெடி.

