பொதுவாக கீரையை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது என்றே சொல்லப்படுகிறது. அந்த வகையில், சில கீரைகள் நாம் எதிர்பார்ப்பை விட ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அப்படி ஒரு மிகவும் ஆரோக்கியமான கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அடையலாம். வல்லாரைக் கீரை சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- வல்லாரைக் கீரை மூன்று கப்
- சின்ன வெங்காயம் 10
- தக்காளி ஒன்று
- உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
- வரமிளகாய் ஐந்து
- பெருங்காயம் அரை டீஸ்பூன்
- எண்ணெய் இரண்டு டீஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
Step 1: முதலில் ஒரு வானொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்று சூடாக்கவும். அதில், வரமிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
Step 2: பின்னர் அவற்றை எண்ணையில் இருந்து எடுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் அதே எண்ணெயில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு குலைந்ததும் கடாயில் வல்லாரைக்கீரை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். சில நிமிடங்களில் கீரை சுருங்கிவிடும்.
நாவில் நீர் ஊறும் சுவையில் ‘போண்டா மோர் குழம்பு’.. சாதாரண மோர் குழம்புக்கு டாட்டா சொல்லுங்க..!
Step 3: ஒரு கீரை நன்றாக வதங்கி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டுக்கு மாற்றி ஆரவைக்கவும். வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியதும். அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி இரண்டு டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.
Step 4: இந்த சட்னி கெட்டியாக இருந்தால், தான் நன்றாக இருக்கும் எனவே குறைந்த அளவு தண்ணீரை போதுமானது. தேவையான உப்பு சேர்த்து அதை அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இட்லி, தோசை, சாதம் போன்றவற்றிற்கு அற்புதமாக இருக்கும்.

