Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»நாவில் நீர் ஊறும் சுவையில் ‘போண்டா மோர் குழம்பு’.. சாதாரண மோர் குழம்புக்கு டாட்டா சொல்லுங்க..!
    சமையல்

    நாவில் நீர் ஊறும் சுவையில் ‘போண்டா மோர் குழம்பு’.. சாதாரண மோர் குழம்புக்கு டாட்டா சொல்லுங்க..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026Updated:May 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    bonda-mor-kuzhambu-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போர் அடித்தவர்கள் சற்று வித்தியாசமாக குழம்பு செய்து சாப்பிட நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி அற்புதமாக பொருந்தும். அதாவது, பல்வேறு மோர் குழம்புகளை நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால், போண்டா மோர் குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இந்த போண்டா மோர் குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த போண்டா மோர் குழம்பு ரெசிபி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    அரைப்பதற்கு

    • மூன்று பச்சை மிளகாய்
    • ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்
    • ஒரு டேபிள் ஸ்பூன் மல்லிவிதை
    • ஒரு இன்ச் இஞ்சி
    • அரை டீஸ்பூன் மிளகு
    • ஒரு கையளவு கருவேப்பிலை
    • தேங்காய் துருவியது ஒரு டீஸ்பூன்
    • 30 நிமிடம் ஊறவைத்த துவரம் பருப்பு
    • ரெண்டு டீஸ்பூன் 30 நிமிடம் ஊற வைத்த கடலைப்பருப்பு
    • ஒரு டீஸ்பூன் 30 நிமிடம் ஊற வைத்த பச்சரிசி

    போண்டாவிற்கு

    • ஒரு கப் ஒரு மணி நேரம் ஊற வைத்த உளுத்தம் பருப்பு
    • கால் கப் முதல் அரை கப் வரை தண்ணீர்
    • சுவைக்கேற்ப உப்பு
    • ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
    • சிறிது பொடியாக நறுக்கிய கருவேப்பிலை
    • ஒரு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
    • சிறிது பொடியாக நறுக்கிய இஞ்சி
    • பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
    • மோர் குழம்பிற்கு ஒரு கப் கெட்டி தயிர்
    • அரை கப் தண்ணீர்
    • சுவைக்கேற்ப உப்பு

    தாளிப்பதற்கு

    • இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
    • ஒரு டீஸ்பூன் கடுகு
    • அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
    • 5 வர மிளகாய்
    • ஒரு கொத்து கருவேப்பிலை

    செய்முறை

    Step 1: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்றாக மென்மையாகும் வரை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் கட்டி தயிர் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதில், அரைத்த மசாலாவை சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    Step 2: பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கொதிக்க விடாமல் சூடேற்றி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், மிக்ஸியில் ஊறவைத்த உளுத்தம் பருப்பை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைக்க வேண்டும். அனைத்து மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கைகளால் நன்று அடித்து கிளறி விட வேண்டும்.

    Step 3: அதில், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கலந்தால் போண்டா மாவு ரெடி பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சூடான எண்ணெயில் குட்டி குட்டி போண்டாக்களாக பொரித்து எடுக்க வேண்டும்.

    Step 4: பின்பு பொறித்த போண்டாக்களை சூடாக இருக்கும் போதே மோர் குழம்புடன் சேர்க்க வேண்டும். இறுதியாக குழம்பை தாளிப்பதற்கு ஒரு வானொலியை அடைப்பில் வைத்து அதில், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்து கலந்தால் சுவையான போண்டா மோர் குழம்பு தயார்.

    Easy morkulambu recipe Tamil Soft urad dal bonda recipe South Indian lunch varieties உளுந்து போண்டா கறி கல்யாண வீட்டு மோர் குழம்பு பாரம்பரிய தமிழ்நாட்டு சமையல் மதிய உணவு குழம்பு வகைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.