Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உடனே அனுமதி கொடுங்க.. அன்புமணி ராமதாஸ் டிமாண்ட்..!
    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உடனே அனுமதி கொடுங்க.. அன்புமணி ராமதாஸ் டிமாண்ட்..!

    Prime ReporterBy Prime ReporterMay 19, 2026Updated:May 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anbumani-demands-tn-govt-senthil-balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    வேலைவாய்ப்பு மோசடி: செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி அப்பாவி இளைஞர்களிடம் மோசடியாக வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமான பரிமாற்றம் செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருக்கிறது.

    அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. திமுகவைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி 2011-15 காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளை வழங்குவதாக கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, வேலைவாய்ப்பு மோசடி மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, அந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 410 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    ஆனாலும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அரசின் அனுமதி அவசியம் என்பதாலும், செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதாலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க முடியவில்லை. செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணைக்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு மே 14-ஆம் தேதி அப்போதைய ஆளுனர் ஆர்.என். இரவி அவர்களிடம் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.

    ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி அரசிடம் தான் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறையின் கோரிக்கையை முந்தைய அரசு நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து தான் இப்போது அமலாக்கத்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது.

    போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வாங்கியதை செந்தில் பாலாஜியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவ்வாறு பாதிக்கப்பட்ட பலருக்கு நேரடியாக பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் உயர்நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடி மூலம் கிடைத்த பணத்தை செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

    இத்தகைய குற்றங்களைச் செய்த ஒருவர், திமுக அரசால் உருவாக்கித் தரப்பட்ட பாதுகாப்புப் போர்வையை பயன்படுத்திக் கொண்டு தப்பிப்பதை அனுமதிக்கக் கூடாது. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் நிலைப்பாடும் இத்தகையதாகவே உள்ளது. லஞ்சத்திற்கு எதிராக ஜீரோ சகிப்புத் தன்மையுடன் த.வெ.க. அரசு செயல்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் 87-ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு செயல்வடிவம் தரும் வகையில் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு மோசடி: செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு
    தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்!

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி அப்பாவி இளைஞர்களிடம் மோசடியாக வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமான பரிமாற்றம் செய்தது தொடர்பாக…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 19, 2026

    Anbumani Ramadoss Senthil Balaji case Enforcement Directorate Senthil Balaji Tamil PMK leader Anbumani statement Senthil Balaji latest court updates Tamil Nadu Political News 2026 TN government approval ED court TVK government PMK alliance அன்புமணி ராமதாஸ் அறிக்கை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கு செந்தில் பாலாஜி வழக்கு 2026 தமிழக அரசு அனுமதி தமிழ்நாடு லேட்டஸ்ட் அரசியல் செய்திகள் தவெக அரசு பாமக பாமக அன்புமணி அரசியல் விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.