Browsing: கோவை

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஜனநாயகம் செத்துவிடும் என்பதை வலியுறுத்தி, சுடுகாட்டிலிருந்து இறுதிச்சடங்கு பானையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நூர் முகமது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

“விலை போகாத மாடு” விமர்சனம்: செந்தில் பாலாஜிக்கு தகுதியில்லை என சூலூர் தவெக வேட்பாளர் சுகுமார் கோவையில் கடும் தாக்குதல். எஸ்பி வேலுமணியை எதிர்க்க சவால்.

கோவையில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் பெயர் எழுதப்பட்டிருந்ததால் போலீசார் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

கோவையில் வீட்டு வாசலில் படித்துக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவி மீது எச்.பி கேஸ் லாரி மோதி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கே.ஜி.சாவடியில் பெரும் பரபரப்பு.

கோவையில் ஓடும் தனியார் பேருந்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த காமாட்சி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை – பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டிய கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த பகீர் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவையில் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிக விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு, தனியார் பேருந்து உரிமையாளர் ராஜ்குமார் இன்று ஒரு நாள் இலவச பேருந்து சேவையை வழங்கி பயணிகளை நெகிழச் செய்துள்ளார்.

கோவை அதிமுகவின் கோட்டை என முழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைவது உறுதி எனத் தெரிவித்தார்.

கருமத்தம்பட்டி அருகே எண்ணெய் கடையில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.