Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. வேலுமணியை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!
    கோவை

    1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. வேலுமணியை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026Updated:April 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Annamalai joins SP Velumani for election nomination filing in Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் அண்ணாமலையுடன் எஸ் பி வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்பி வேலுமணி ஈச்சனாரி விநாயகர் கோயில், சுகுணாபுரம் மாரியம்மன் கோவில் அதைத் தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பேரணியாக சென்று பேரூர் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    குறிப்பாக பேரூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த எஸ் பி வேலுமணிக்கு அதிமுக பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த பேரணியில் கலந்து கொண்டதோடு, எஸ் பி வேலுமணியோடிய இணைந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வட இந்திய வாக்காளர்களைக் கவர திட்டம்?.. ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரம்..!

    இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி வேலுமணி, இந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் மிகப்பெரிய வளர்ச்சியையும், எல்லா வளர்ச்சியையும் நாங்கள்தான் கொடுத்திருக்கிறோம் எனவும் கல்லூரி, தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம், சாலை விரிவாக்கம் , பாலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்திருக்கிறோம், ஆகவே மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்வார்கள் எனவும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்த பிறகு அதிமுக தற்போது பாஜக கூட்டணியுடன் உள்ளதாலும், மத்தியில் மோடி பிரதமராக உள்ளதாலும், மத்தியிலும் மாநிலத்திலும் இணைந்து அதிகமான, தொகுதிக்கும் கோவைக்கும் மிகப்பெரிய வளர்ச்சியை, திமுக செய்யாத திட்டங்களை, விடுபட்ட திட்டங்களை, இன்னும் அதிகமான அதிகமான திட்டங்களை செய்வோம் என தெரிவித்தார்.

    மேலும் தொண்டாமுத்தூரில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற அனைவரும் கூறுகிறார்கள் என தெரிவித்த எஸ் பி வேலுமணி, கோவை தெற்கு தொகுதி உட்பட கோவையில் இறக்குமதி வேட்பாளர்கள் இறக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கடந்த முறை கோவை மாவட்டத்தில் பத்துக்கு பத்து தொகுதிகளில் வெற்றி பெற்றோம், இந்த முறை அவிநாசியும் சேர்த்து 11 தொகுதிகளிலும் முழுமையாக எங்களது கூட்டணி வெற்றி பெறும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என தெரிவித்தார்.

    கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!


    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கோவையின் வளர்ச்சி நாயகனாக, கோவையின் காவலனாக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான எஸ்பி வேலுமணி வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், தொண்டாமுத்தூரில் அவர் செய்த நல்ல பணிகளில் பயன்பற்றவர்கள் அவர்களாகவே இன்று திரண்டு வந்திருக்கிறார்கள் எனவும் எஸ் பி வேலுமணி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வர வேண்டும்,மறுபடியும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எஸ்பி வேலுமணி உயர்ந்த பொறுப்பில் வந்த பிறகு கோவையின் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் எனவும் வளர்ச்சி நிறைய தடைப்பட்டு இருப்பதாகவும், அதனால்தான் எஸ் பி வேலுமணியுடன் நின்று கொண்டிருப்பதாகவும், கோவையின் வளர்ச்சியை எஸ் பி வேலுமணி தான் உறுதி செய்ய முடியும் என தெரிவித்தார்.

    பெரிய வெற்றி தொண்டாமுத்தூரில் உறுதி என தெரிவித்த அண்ணாமலை, எஸ் பி வேலுமணி கூறியது போல 11 க்கு 11 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்.கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் எடப்பாடி பழனிச்சாமி, எஸ் பி வேலுமணி உயர்ந்த பதவியில் அமர்ந்த பிறகு மத்திய அரசிடம் இருந்து திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தியே தீருவோம், அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை, பாஜக அதிகாரப்பூர்வமாக சொல்கிறோம் எனவும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் தொடர்பாக பேசி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    9-ம் தேதி முதல் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக கூறிய அண்ணாமலை, இந்த முறை தான் வேட்பாளராக இல்லாத காரணத்தால் சிறிது நேரம் இருக்கிறது, தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்வோம் எனவும், தங்கள் கட்சி தற்போது என்னிடம் பிரச்சாரம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளது, கட்சி நாளை வேட்பாளராக நிற்க வேண்டும் எனக் கூறினால் வேறு ஒரு தேர்தலில் வேட்பாளராக நிற்பேன் எனவும் தொண்டாமுத்தூரில் எஸ் பி வேலுமணி பிரச்சாரம் செய்வார், நான் மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார்.

    AIADMK BJP alliance TN Annamalai Coimbatore visit Coimbatore Metro Rail project Edappadi Palaniswami CM candidate SP Velumani nomination filing Tamil Nadu Election updates Thondamuthur constituency 2026 அண்ணாமலை கோவை வருகை அதிமுக பாஜக கூட்டணி எடப்பாடி பழனிசாமி முதல்வர் எஸ்.பி. வேலுமணி வேட்புமனு கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொண்டாமுத்தூர் தேர்தல் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.