Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!
    கோவை

    கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cbe utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று அரங்கேறிய ஒரு நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கரராஜ் (44), சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

    தேர்தல் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. கால்கள் பாதிக்கப்பட்ட சங்கரராஜ், மாடிக்கு ஏறிச் செல்வது கடினம் என்பதால், தேர்தல் நடத்தும் அலுவலர் மாருதிப்பிரியாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “நான் மாற்றுத்திறனாளி என்பதால் மாடிக்கு வர சிரமமாக உள்ளது, தயவுசெய்து கீழே வந்து மனுவைப் பெற்றுக்கொள்ள முடியுமா?” என உருக்கமாகக் கேட்டார்.

    அதிகாரியின் கறார் பதில்: ஆனால், மனிதாபிமானத்தை விட விதிமுறைகளே முக்கியம் என நினைத்த அதிகாரி, “தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் அறைக்கு வந்துதான் மனு கொடுக்க வேண்டும்” என கறாராகக் கூறிவிட்டார். வேறு வழியின்றி, சங்கரராஜ் மிகுந்த உடல் உபாதைகளுக்கிடையே, ஒவ்வொரு படியாக ஊர்ந்து மிகுந்த சிரமத்துடன் முதல் மாடிக்குச் சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

    cbe utv

    மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கரராஜ் கூறியதாவது:
    “மாற்றுத்திறனாளிகள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரான நான், மாற்றுத்திறனாளிகளின் அரசியல் அங்கீகாரத்திற்காக தொண்டாமுத்தூர் மற்றும் தெற்கு தொகுதிகளில் போட்டியிடுகிறேன். இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்குகள் உள்ளன.

    தேர்தல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சாய்வுதளம், வீல்சேர் என வசதி செய்து தரும் அரசு, வேட்புமனு தாக்கலின் போது மட்டும் ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை? என்னைப் போன்றவர்கள் வரும்போது அதிகாரிகள் கீழே வந்து மனுவைப் பெற வேண்டும் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் அலுவலகங்களை அமைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

    Coimbatore Election News Differently Abled Candidate Nomination Filing Coimbatore Thondamuthur Constituency கோவை தேர்தல் செய்தி தொண்டாமுத்தூர் தொகுதி மாற்றுத்திறனாளி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.