Author: Prime Reporter
சன் டிவியின் டிஆர்பி ரேட்டை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சீரியல்களில் சிங்கப்பெண்யே சீரியலுக்கு தனியிடம் உண்டு. ஆரம்பம் முதல் தற்போது வரை விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலில் ஆனந்தி, அன்பு கதாபாத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் அன்பு கதாபாத்திரத்தில் நடிப்பவர் அமல். இவர் இந்த சீரியலுக்கு முன் அம்மன் என்ற சீரியலில் நடித்ரிதருந்தார். சீரியலில் நடிக்கும் முன் வாய்ப்பில்லாமல் கேட்டரிங் சர்வீஸ் வேலை எல்லாம் பார்த்து, சினிமாவுக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனிடைய தான் அவருக்கு அம்மன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்த நடிகை பவித்ராவை காதலித்த தொடங்கினார். பவித்ரா தற்போது விஜய் டிவியில் கண்ணே கலைமானே சீரியலில் நடித்து வருகிறார். அமல் மலையாளத்தில் நடித்தாலும், சிங்கப்பெண்ணே சீரியல் மூலம் பிரபலமானார். அம்மன் சீரியல் முடிந்ததும் வாய்ப்பில்லாமல் இருந்த அவருக்கு சிங்கப்பெண்ணே பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஆனாலும், அம்மன் சீரியலில் நடித்த நடிகை பவித்ராவை…
கோவை சரவணம்பட்டி சத்தி சாலை பகுதியில் இருக்கும் புரோஜோன் வணிக வளாகத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் புரோஜோன் வணிக வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன் முறையாக 40 அடி உயர ஸ்நோ-மேன் மற்றும் கிறிஸ்மஸ் ஸ்நோ மென் வில்லேஜ் பொதுமக்கள் பார்வைக்காக புரோஜோன் மாலில் துவங்கப்பட்டது.இந்த திருவிழாவானது பொதுமக்கள் பார்வைக்காக டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி இலவசமாக பொதுமக்கள் கண்டு பார்வையிடலாம். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையொட்டி நாள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த கிறிஸ்துமஸ் ஸ்நோ-மேன் வில்லேஜ் மற்றும் மேஜிக்கல் லைட்டிங் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
கோவையில் இளம் பெண்ணை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் தனது மனைவியுடன் கோவை, சோமனூர், நஞ்சுண்டாபுரத்தில் குடியேறி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார். மனைவியும் அங்கு வேலை செய்த ஒரு இளம் பெண்ணும் தோழியாக பழகினர். அப்பொழுது ஜெகனுக்கு மனைவி மூலம் இளம்பெண்ணின் செல்போன் எண் கிடைத்தது. இளம் பெண்ணின் அழகில் மயங்கிய ஜெகன் அவரிடம் அடிக்கடி போன் செய்து பேசி வந்தார். இதனால் ஜெகனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்த நாளன்று ஜெகனுக்கு அந்த இளம்பெண் கை கடிகாரத்தை பரிசாக வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் இளம் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜெகன்,…
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமனம். தமிழக அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் என அனைத்து கட்சிகளும் களத்தில் தேர்தல் வேலை செய்ய ஆரம்பித்துள்ளன. பொதுமக்களை நேரில் சந்தித்து இப்போது இருந்தே வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் பூத் ஏஜெண்டை நியமிக்கும் பணிகளை தீவிரப் படுத்தி உள்ளனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை நியமித்துள்ளார். இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மற்றும் முரளிதர் அவர்களையும் நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான…
சூலூர் அருகே சுடுகாட்டில் பெயிண்டர் ஒருவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரத். பெயின்டிங் வேலை செய்து வந்த இவர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பரத் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் காலை வரை வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் பரத்தைத் தேடி, வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, வாயில் ரத்தக்கறையுடன் அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரின் காலணிகள் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த மாலை உள்ளிட்டவையும் அருகே சிதறிக் கிடந்தன. உடனடியாக இது குறித்து சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர், பரத் இறந்து…
இயக்குநராக கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி பட வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. லவ் டுடே படத்தை இயக்கிய பிரதீப், நாயகனாகவும் நடித்தார். இளம் தலைமுறையை கவர்ந்த அந்த படம் ரூ.100 கோடி வசூலை குவித்தது. இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடிக்க, அந்த படமும் ரூ.100 கோடி வசூலை குவித்தது. அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கிய அவர், கீர்த்தீஸ்வரன் இயக்கிய ட்யூட் படத்தில் அசத்தியிருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் GEN Z தலைமுறையினரை அந்த படம் ஈர்த்தது. ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து பிரதீப் ரங்கநாதனை அடுத்த லெவலுக்கு ஏற்றி விட்டது. தற்போது அவர் கைவசம் lik படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் 18ஆம்…
வில்லுப்பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராணி. மலையாளத்தில் தொடர்ந்து ஹிட் படம் கொடுத்த நடிகை ராணியை தமிழுக்கு அழைத்து வந்தவர் கங்கை அமரன். ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த ராணிக்கு தமிழில் பெரிய வாய்ப்பு அமையவில்லை. நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் கவர்ச்சி நடிகையாக மாறினார். ஐட்டம் டான்சராக மாறிய அவருக்கு ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்பு குவிந்தது. ஜெமினி படத்தில் ஓ போடு பாட்டுக்கு விக்ரமுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த அவர், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வந்தார். டீச்சராக தமிழ் மனதில் பதிந்துள்ள ராணி தனது மகளை சினிமாவில் களமிறக்கியுள்ளார். இயக்குநர் பொன்ராம் உருவாக்கும் கொம்பு சீவி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் தார்னிகா. இந்த படத்தில் கேப்டனின் இளையமகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்றும், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை திணிப்பாக பார்க்காமல், மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பிரபல யூடியூபர் மாரிதாஸ் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் திமுக செய்த துரோகம் , கீழ்தரமான அரசியலை உச்ச நீதிமன்றம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. ஆனா எந்த தமிழக செய்தி ஊடகம் பரபரப்பு செய்தி போட்டானா? விவாதம் செய்தானா? இத்தனை ஆண்டுகளில் கிராமத்து பகுதியில் உள்ள சுமார் 5 லட்சம் மாணவர்கள்…
உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு 2 மகன்களை பெற்ற தாய் செய்த சம்பவம் பெங்களூருவை அதிர வைத்துள்ளது. பெங்களூரு சந்திரா லே அவுட் பகுதியை சேர்ந்த மோனிகா (வயது 35) தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மோனிகா, 2வது திருமணம் செய்து கொண்டார். தனது இருமகன்களுடன் 2வது கணவருடன் மோனிகா வசித்து வந்தார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் மூழ்கிய அவர், ரீல்ஸ் போட ஆரம்பித்தார். மோனிகா ரீல்ஸ்களை பார்த்த போலீஸ்காரர் ராகவேந்திரா மயங்கினார். ஒரு கட்டத்தில் மோனிகாவுடன் பேச வேண்டும் என செல்போன் நம்பரை கேட்டார். மோனிகாவும் நம்பரை ஷேர் செய்ய இருவரும் மணிக்கணிக்கில் பேச ஆரம்பித்தனர். பின்னர் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இது பத்தாது என்று, தான் வசிக்கும் வீட்டிற்கே போலீஸ்காரரை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் மோனிகா. இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட, இவர்களது ரீல்ஸ் வைரலானது. போலீஸ்காரரான ராகவேந்திராவுக்கு…
