Author: Prime Reporter

அவிநாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் விருப்ப மனு வழங்கினார் இவர் அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பதவியில் உள்ளார்

Read More

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியானது. இதில் முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. இதுகுறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ஷுப்மான் கில் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்படவில்லை என சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்தார். அணியின் ஒருங்கிணைப்பு தேவைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்பட்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்றும், இது கில்லின் ஃபார்முடன் தொடர்புடையது அல்ல என்றும் அவர் கூறினார். கில்லின் திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை; அவர் ஒரு சிறந்த வீரர் என்றும் சூர்யகுமார் வலியுறுத்தினார். அணியின் சமநிலைக்காக ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அணிக்குள் நெகிழ்வுத்தன்மையை உருவாக்க பல விருப்பங்களை திறந்து வைத்திருப்பது அவசியம்…

Read More

உதகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தனியாா் தொழிற்சாலையில் சாக்லேட் திருவிழா தொடங்கியது.நீலகிரியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நீலகிரி தேன், மலை நெல்லிக்காய், நீலகிரி தேநீர், குறிஞ்சி மூலிகை கல் உப்பு, நீலகிரி மிளகு, நீலகிரி வன காளான் ஆகிய ஆறு சுவைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அவா்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினா். தொடா்ந்து நூற்றாண்டைக் கடந்தும் ஆங்கிலேயா்களின் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயா்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோம்மேட் சாக்லேட் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உதகையில் உள்ள மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் உள்ள தனியார் சாக்லேட் தொழிற்சாலையில் சாக்லேட் திருவிழா இன்று தொடங்கியது. இந்தாண்டு தி கிராண்ட் சாக்லேட் எக்ஸ்ட்ராவாகன்சா 2025…

Read More

வரும் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அதே சமயம் இன்பன் உதயநிதி பேனரில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் முன்கூட்டியே ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதை வலைப்பேச்சு அந்தணன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விஜய் படத்தின் வசூலை சீர்குலைக்கவே சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட உள்ளனர். இருநடிகர்கள் படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை, சிவகார்த்திகேயன் ரஜினியுடன் நடிக்க விரும்பினார். ஆனால் ரஜினி மறுத்தார். அஜித்துடன் நடிக்க பிளான் போட்டார், குட் பேட் அக்லி அல்லது விடாமுயற்சியில் நடிக்க முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ஆனால் கோட் படத்தில் சிவா நடிக்க விஜய் ஓகே சொன்னார். இப்படியிருக்க ஜனநாயகன்…

Read More

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பேசும்போது : கோவை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மகளிர் மாநாட்டில் ஐம்பதாயிரம் மகளிர் பயன்பட இருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள அதில் எவரேனும் நீக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தகுதியானவர்களாக இருப்பின் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான பணிகளை முன்னெடுத்து உள்ளோம்.கோயம்புத்தூரில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் ? இன்று தான் அரசியல் கட்சியினிடம் பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை பார்த்த பிறகு தான் தெரிய வரும். குடியிருப்பு மாறியவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உடைய பெயர்களை நீக்காமல் இருந்து இருக்கலாம். இந்த பட்டியலை பார்த்து பிறகு தான் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கப்படும். தி.மு.க வின் கள்ள…

Read More

கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியன் தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் பேர் சொல்லும்படி எந்த படமும் அமையவில்லை. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் பொன்ராம் உருவாக்கிய படம் கொம்புசீவி. சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, நாட்டாமை டீச்சர் ராணியின் மகள் தரணிகா நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேற்று கொம்புசீவி படம் உலகமெங்கும் வெளியானது. படத்தின் முதல் நாளே பாசிட்டிவ் ரிவ்யூஸ் வந்துள்ளது படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது. மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் உண்மை கதை தழுவியது. நல்ல விமர்சனங்களுடன் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் முதல் நாளே ரூ.40 லட்சம் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Read More

நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட மலையாள பழம்பெரும் நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 69. மலையாள திரையுலகில் 50 ஆண்டுகளாக புகழ் பெற்ற நடிகராக விளங்கிய ஸ்ரீனிவாசன், தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகளை பெற்றவர். கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமிழில் லேசா, லேசா, புள்ளக்குட்டிக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். ஸ்ரீனிவாசன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ஆடியோவில் இரங்கல் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ஸ்ரீனிவாசன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல், நாங்கள் இருவரும் பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒரே வகுப்பில் பணியாற்றியதாக கூறியுள்ளார்.

Read More

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்கள் இரவு பகலாக தற்பொழுது வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்த போராட்டத்தில், தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 பணி இடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்ததும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைந்து நீண்ட காலம் ஆகியும் செவிலியர்களின் கோரிக்கைகள்…

Read More

நாங்கள் தீய சக்தி அல்ல, மக்களின் சக்தி, அதைத்தான் நம்புகிறோம் சினிமா வசனம் பேசுகிறார் விஜய், அவருக்கு சிலப்பதிகாரம் என்ன என்பதெல்லாம் தெரியாது

Read More

பழம்பெரும் மலையாள நடிகர், எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் (69) உடல்நலக்குறைவால் காலமானார் 50 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வந்த இவர், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்

Read More