Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»ராகு – கேது தோஷம் நீக்கும்.. கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தின் வியப்பூட்டும் சிறப்புகள்..!
    ஆன்மிகம்

    ராகு – கேது தோஷம் நீக்கும்.. கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தின் வியப்பூட்டும் சிறப்புகள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 8, 2026Updated:March 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Kodumudi temple UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மும்மூர்த்திகளை கொண்ட ஒரே கோவில் என்ற வியப்புமிகு வரலாற்று பெருமை பெற்றது ஈரோடு மாவட்டத்தில் உள்ள ‘ஸ்ரீ மகுடேஸ்வரர் ஆலயம்‘ இந்த ஆலயத்திற்கு செல்ல ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடுமுடி என்னும் பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    இந்த மகுடேஸ்வரர் ஆலயத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கின்றனர். முன்னதாக, திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருக்கிறார் என்று சொல்லப்படுவது போல் இங்கு மலையின் முடியாக சிவன் இருக்கிறார் என்று கருதப்படுவதாலேயே இது கொடுமுடி என்ற பெயரை பெற்றதாக கூறப்படுகிறது.

    Kodumudi temple UTv

    இங்கு காட்சி தரும் சிவன் மகுடேஸ்வரராகவும், அம்பிகை வடிவுடைய நாயகியாகவும் காட்சி தருகின்றனர். இத்தலத்தின் லிங்கம் மிகவும் சிறியதாகவும் அகத்திய மாமுனிவர் இந்த லிங்கத்தை தடவியதால், உண்டான கைவிரல்களை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

    இந்த மகுடேஸ்வரர் கோயில் காவேரி ஆற்றின் மேல் கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது. பிரம்மா, சிவன், விஷ்ணு என மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக 3 கோபுரங்களும் தனித்தனியாக 3 சன்னதிகளும் 3 வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    Kodumudi temple UTv

    இந்த ஆலயத்திற்கு வந்து விட்டால் 3 மடங்கான ஆசீர்வாத பலன்கள் கிடைக்கும். பாவங்கள் விலகும் என்பது இங்கு ஐதீகம். மகுடேஸ்வரர் ஆன சிவபெருமானின் திருக்கல்யாணத்தை காண்பதற்காக படைப்பு கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவும் இந்த தளத்திற்கு வந்ததாக புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன.

    Kodumudi temple UTv

    இக்கோவிலில் 3000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். 3 முகம் கொண்ட பிரம்மதேவன் இந்த வன்னி மரத்தின் அடியில் காட்சி கொடுக்கிறார். இந்த மரத்தில் பூ பூக்கும் ஆனால், காய் காய்க்காது ஒரு பக்கம் முள்ளிருக்கும். மறுபக்கம் முள் இருக்காது.

    Kodumudi temple UTv

    இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும், அந்த தண்ணீர் கெட்டுப் போகாது. மேலும், இந்த வன்னிமரம் இலையை திருவிழாவிற்கு தீர்த்தக்காவடி எடுக்கும் பக்தர்கள் காவிரி நீரில் போட்டு தான் காவடி சுமந்து இன்றும் பாதயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த மகுடேஸ்வரர் கோயிலில் வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் முதற்கடவுள் விநாயகர் அமைந்துள்ளார். இந்த விநாயகரை காவிரி நீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை விலகும் என்று கூறப்படுகிறது.

    Kodumudi temple UTv

    மேலும், குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்றும், நம்பப்பட்டு வருகிறது. வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது கூடுதல் சிறப்பு. காவிரி நதியின் மேற்கு கரையில் கொடுமுடி நாதர் கோவில் அமைந்திருக்கிறது.

    Kodumudi temple UTv

    கொடுமுடியில், இருந்து தான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில், பக்தர்கள் புனித நீராடிய பின் கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த கோவிலுக்கு சென்று வருவதால் தோஷங்கள் நீங்கும் தளமாகவும், இது விளங்குகிறது. இங்கு மூலவர் வீரநாராயண பெருமாளை பார்த்தபடி கருடாழ்வார் காட்சி தருகிறார்.

    Kodumudi temple UTv

    மூலவர் பெருமாள் படுத்தக் கோலத்தில் காட்சி தருகிறார். மேலும், இந்த மகுடேஸ்வரர் கோவிலில் 12 ஆழ்வார்கள் உள்ளனர். இக்கோவிலில், ஆஞ்சநேயர் சற்று வித்தியாசமாக கோரப்பல்லோடு காட்சியளிக்கிறார். இங்கு, மகாலட்சுமி தாயார் சன்னதியும் இருக்கிறது. இந்த கோயிலின் மேற்கூரையில் ராசி சக்கரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

    தரிசன நேரம்

    இந்த ஆலயம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கீழ்க்கண்ட நேரங்களில் திறந்திருக்கும்

    காலை: 6:00 AM முதல் 12:30 PM வரை

    மாலை: 3:00 PM முதல் 8:00 PM வரை

    மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழி: https://www.google.com/maps/search/?api=1&query=Arulmigu+Sri+Magudeswarar+Temple&query_place_id=ChIJ0eBNbTaAqTsRi3gWpZB50QM

    Bramha Vishnu Shiva temple Kodumudi Erode Trimurti temple significance Kodumudi Magudeswarar Temple miracle Kodumudi temple history Tamil Miracle Vanni tree Kodumudi Spiritual significance of Kodumudi Vanni tree benefits and miracles அதிசய வன்னி மரம் கொடுமுடி காய் காய்க்காத மரம் அதிசயம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மும்மூர்த்திகள் தலம் ஈரோடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    துளசி மாடத்தில் சங்கு வைப்பதன் ரகசியம் என்ன? ஆன்மிகத் தகவல்கள்!

    August 24, 2026

    செவ்வாய் தோஷம் நீங்கவும், சஷ்டி விரத பலன்கள் பெறவும் முருகப்பெருமான் வழிபாட்டின் மகத்துவம்..!

    August 17, 2026

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.