மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கத் தவறியுள்ளதாகவும், டெல்டா மாவட்டங்கள் நீர் இன்றி வறண்டு காணப்படுவதாகவும் குற்றம்சாட்டி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை என்றும், நிர்வாகத் திறனற்ற ஒரு ‘டம்மி முதல்-அமைச்சர்’ ஆட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். மேலும், கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்க்கத் திராணி இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“சாதி, மதமற்றவர்” சான்றிதழ்.. நடிகர் பார்த்திபனின் புதிய முன்னெடுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு..!
அமைச்சர்கள் மற்றும் முதல்வர் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிடுவதிலேயே குறியாக இருப்பதாகவும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ‘ஜோக்கர் கூட்டமாக’ செயல்படுவதாகவும் அவர் சாடினார். காவிரி விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் திசை திருப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

