சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி சமீபத்தில் ‘சாதி, மதமற்றவர்’ (No Caste, No Religion) சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபன், பொதுமக்கள் பலரும் இத்தகைய சான்றிதழ்களை எளிதில் பெறும் வகையில் முறையான சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
சாதி, மதமற்றவர் எனச் சான்று கோரும் விண்ணப்பங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பரிசீலிக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதற்கான சூழல் உள்ளதால், இதுதொடர்பாகச் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உள்துறை, வருவாய்த்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.

