ஆரோக்கியமான கீரை வேபுடு
தேவையான பொருட்கள்
- கீரை (அரைக்கீரை அல்லது சிறுகீரை) – 1 கட்டு (நன்கு கழுவி நறுக்கியது)
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 5 முதல் 6 பற்கள் (நசுக்கியது)
- காய்ந்த மிளகாய் – 2
- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க
- வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- பூண்டு – 3 பற்கள்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
செய்முறை
Step 1: முதலில் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, அதனுடன் பூண்டு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.
Step 2: வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். அதில் நசுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
மதிய உணவிற்கு அட்டகாசமான காராமணி குழம்பு.. சில சீக்ரெட் டிப்ஸ்..!
Step 3: வெங்காயம் வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கீரை, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். (கீரையில் உள்ள தண்ணீரே போதுமானது, கூடுதலாகத் தண்ணீர் சேர்க்க வேண்டாம்).
Step 4: கீரை நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், அரைத்து வைத்துள்ள வேர்க்கடலைப் பொடியைத் தூவி, நன்கு கிளறி ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். சூடான சாதத்திற்கு ஏற்ற சுவையான கீரை வேபுடு தயார்!

