கோவை மாவட்டம் சூலூரில் பெண் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் கல்வி நகரமான கோவை, தற்போது பெண்கள் மீதான கொடுமைகள் நிகழும் நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக இயங்கியது, ஆனால் இப்போது அது எங்கே இருக்கிறது என்று மக்கள் தேடும் நிலைக்கு வந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
முடிவுக்கு வரும் குட்கா முறைகேடு?.. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கில் கால அவகாசம்..!
பெண்களின் பாதுகாப்பில் தற்போதைய அரசு தோல்வியடைந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள வானதி சீனிவாசன், பள்ளிகளில் மாணவிகளுக்கு வழங்குவது போல, பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகளை வழங்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

