Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!
    கோவை

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    minister-sengottaiyan-press-meet-coimbatore-airport-highlights
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை தவெகவில் இணைப்பது தொடர்பான கேள்விக்கு, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேறு, அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது வேறு என்றும், யார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்; ஆனால் அவர் தண்டனை பெற்றவரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் பலே பதில் கொடுத்துள்ளார்.

    பள்ளி, கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கட்டணம் எல்லாம் செலுத்தி முடிந்து கல்லூரிகள் திறக்கப்படும் போது கேள்வி கேட்கிறீர்கள்” என்று அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், முதல்வர் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருவதாகவும், அதை அவர் செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய யாரும் வற்புறுத்தவில்லை என்றும், யார் வற்புறுத்தினார்கள் என்று அவர் கூறினால் அதற்கு பதிலளிக்க முடியும் என்றும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய கட்சியை எடப்பாடி பழனிசாமி கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருவதாக விமர்சித்தார்.

    மற்றவர்களின் கருத்துகளை கேட்டு செயல்படுவதால்தான் ஒருவர் பின் ஒருவராக கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பான கேள்விக்கு, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேறு, அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது வேறு என்றும், யார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்; ஆனால் அவர் தண்டனை பெற்றவரா என்பதை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    சமூக வலைத்தளத்தில் தனியார் மருத்துவமனைக்காக பேசவில்லை என்றும், கோவை மெடிக்கல் சென்டர் தனது மைத்துனரின் மருத்துவமனை என்பதால் அங்குதான் சிகிச்சை பெறுவதாகவும் விளக்கமளித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு வருவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் என்றும், அதற்காக 100 ஏக்கர் நிலம் தேவைப்படுவதோடு, விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே இருந்தால்தான் திட்டம் வெற்றியடையும் என்றும் கூறினார்.

    மக்களே உஷார்.. 34 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

    விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நிலம் தேவைப்படுவதாகவும், அதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தார். கோவையில் நிலத்தின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளதாகவும், சென்னையை விட கூடுதலாக நில விலை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.செந்தில் பாலாஜி மீது விசாரணை நடைபெறுமா என்ற கேள்விக்கு, விசாரணையில் யார் மூல காரணம் என்பது தெரியவரும்; அதன் பிறகே யார் மீது வழக்கு தொடர வேண்டும் என்பது முடிவு செய்யப்படும் என்றார்.

    அதிமுகவில் இருக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை என சி.வி. சண்முகம் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டபோது, அதே கருத்தை எஸ்.பி. வேலுமணியும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.கரூர் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக திமுகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது என்றும், வழக்கு தொடரப்பட்டால் அதற்கு அவர் பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார்.

    துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதை முதல்வரின் கரூர் பயணத்துடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். முதல்வர் கரூருக்கு செல்வதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.லஞ்ச ஒழிப்புத்துறையின் தொடர் சோதனைகள் குறித்து கேட்கப்பட்டபோது, எந்தத் தவறும் நடைபெறக் கூடாது என்பதற்காக முதல்வர் கண்காணித்து வருகிறார் என்றும், ஒவ்வொரு துறையும் சரியாக செயல்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    அரசுப் பணியிடங்களில் தனக்கு வேண்டியவர்களை நியமிக்கிறது என்ற நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், மத்தியில் பாஜக ஆட்சியில் யார் யாரை நியமித்தார்கள் என்ற பட்டியலை முதலில் வெளியிட வேண்டும் என்று கூறினார்.தனியார் பள்ளி, கல்லூரிகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், உயர்கல்வித் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் இரண்டு முதல் மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.கூடுதல் மதிப்பீடுகளுடன் டெண்டர் விடப்பட்ட விவகாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் கூறினார்.

    காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகே தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும், அமைச்சர் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.பள்ளி, கல்லூரிகளின் கட்டண வசூல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கட்டணம் எல்லாம் செலுத்தி முடிந்து கல்லூரிகள் திறக்கப்படும் போது கேள்வி கேட்கிறீர்கள்” என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

    புதிய அரசு பொறுப்பேற்று 55 நாட்கள்தான் ஆகியுள்ளதாகவும், ஆறு மாதங்கள் பொறுத்திருந்து அரசின் செயல்பாடுகளைப் பாருங்கள் என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். தனது துறையில் தவறுகள் கண்டறியப்படும் இடங்களில் தேவையான மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    ADMK Updates Coimbatore News Minister Sengottaiyan Interview School College Fees Sengottaiyan Press Meet TN Political News TVK Controversy அமைச்சர் செங்கோட்டையன் கல்வி கட்டணம் கோவை விமான நிலையம் செங்கோட்டையன் பேட்டி தமிழக அரசியல் தவெக சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.