கடந்த 24 ஆம் தேதி கோவை கோவைபுதூர் பகுதியில் நிர்வாண கோலத்தில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர் யார் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக மதுக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பெண்ணின் அங்க அடையாளங்களை வைத்தும் அதனை விளம்பரப்படுத்தியும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.சம்பவம் நடைபெற்ற பகுதியில் எந்த ஒரு சிசிடிவி கேமராக்களும் இல்லாததால் குற்றவாளியை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்ட சூழலில் தற்பொழுது உயிரிழந்த இளம் பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பர்ஷா என்பது தெரியவந்துள்ளது.
மாணவியை வழிமறித்துத் தாக்குதல்.. தந்தை உட்பட 3 பேர் கைது..!
மேலும், தனது கணவர் ஜெகநாத் என்பவருடன் கோவைபுதூர் அடுத்த ஈஸ்வர் நகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.ஜெகநாத் மேசன் பணியில் ஈடுபட்டு வந்ததும் இருவரும் கட்டிட கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது கணவர் ஜெகநாத் தலைமறைவாகி இருப்பதுடன் ஜெகன்நாத்தின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருப்பதால் கொலையாளி அவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த நிலையில் ஜெகன்நாத்தை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

