தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது ஆளுநர் உரை மீதான விவாத நேரலை துண்டிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நேரலையை நிறுத்திவிட்டு, எதிர்க்கட்சியினரின் விவாதங்களை இருட்டடிப்பு செய்து, ஆளுங்கட்சியினருக்கு சாதகமான பகுதிகளை மட்டும் எடிட் (Edit) செய்து மாலையில் வெளியிடுவது மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமையை நசுக்கும் செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வரலாற்றில் முதல்முறை.. அமைச்சர்களின் போன் நம்பர், இமெயில் முகவரிகள் வெளியீடு..!
இந்த அரசு வெளிப்படைத்தன்மை கொண்டது என்று கூறிக்கொண்டு, வாக்களித்த மக்கள் விவாதங்களைத் தெரிந்துகொள்ள விடாமல் தடுப்பது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம் என்றும், ஊடகங்களுக்கு அரைகுறை செய்திகளை வழங்குவது பாசிச நடவடிக்கை என்றும் கடிதத்தில் சாடியுள்ளார்.
வரும் திங்கட்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் உரையாற்ற உள்ளதால், பேரவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமன்ற நிகழ்வுகளை உடனடியாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில், சட்டமன்றம் கூடுவதற்கும் மக்கள் அளித்த வாக்குக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும் எனத் தெரிவித்துள்ளார்.

