Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!
    கோவை

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    Prime ReporterBy Prime ReporterJune 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-pudur-neet-student-suicide-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தம் காரணமாக, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த 19 வயது மாணவி ஒருவர் உறவினர்களுக்கு உருக்கமான வாட்ஸ்-அப் செய்தி அனுப்பிவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான அனுகீர்த்தனா, எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பை சிறப்பாக முடித்திருந்தார்.சிறு வயதிலிருந்தே மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இருந்த அனுகீர்த்தனா, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி தேர்வும் எழுதியிருந்தார்.

    மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு குறித்த சர்ச்சைகள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.இந்த சூழல் மாணவியை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

    மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டால் தன்னால் விரும்பிய மதிப்பெண்களை பெற முடியுமா என்ற அச்சமும், தனது நீட் பயிற்சிக்காக தந்தை லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதும் அவரை மனரீதியாக பாதித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் நீண்ட உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், “நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர காத்திருந்தேன். தற்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பயமாக இருக்கிறது. எனக்காக தந்தை அதிகம் செலவு செய்துள்ளார். அவருடைய முகத்தை இனிமேல் எப்படி பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை” என தனது மனவேதனையை வெளிப்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    அந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர். அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அனுகீர்த்தனா விஷம் அருந்திய நிலையில் மயக்கத்துடன் கிடந்ததாக கூறப்படுகிறது.
    உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவியின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் அனுப்பிய வாட்ஸ்-அப் செய்திகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவி, மீண்டும் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார். வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு தொடர்பான குழப்பங்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
    மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் போராடிய மாணவியின் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் கல்வி வட்டாரங்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

    Anukeerthana Suicide Case Pudur Coimbatore Local News 2026 Coimbatore NEET Student Suicide Kuniyamuthur Police Investigation NEET Controversy Impact Tamil Nadu NEET Exam Stress Student Death Student Mental Health Issues அனுகீர்த்தனா தற்கொலை கோவை புதூர் குனியமுத்தூர் போலீஸ் விசாரணை கோவை உள்ளூர் செய்திகள் 2026 கோவை நீட் மாணவி தற்கொலை டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் மகள் நீட் தேர்வு மன அழுத்தம் நீட் வினாத்தாள் சர்ச்சை பாதிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.