தமிழ் ஜனத்தில் செய்தி வெளியான நிலையில் அமைச்சர் தங்களது விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தங்களுக்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றி என பாதிக்கபப்ட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சமூக நீதித்துறை சார்பில் செயல்படும் மாணவிகள் விடுதியில் உணவுகளில் புழு பூச்சிகள் இருப்பதாக ஏ பி வி பி மாணவர் அமைப்புடன் இணைந்து சமூக நீதித்துறை விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் புகார் அளித்திருந்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் பிரத்தியேகமாக செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், செய்தியின் எதிரொலியாக வீடியோ கால் மூலமாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மாணவிகளுடன் குறைகளை கேட்டு அறிந்த நிலையில் இன்று விடுதியில் நேரடியாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
உங்களுக்கு ஏன் பதற்றம்?.. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனைச் சாடிய தவெக அமைச்சர் ரமேஷ்..!
அப்போது மாணவிகளின் குறைகளை கேட்டு அறிந்த அவர் உணவு தயாரித்த நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு விடுதி என்றால் உணவுகள் அப்படித்தான் இருக்கும் ஹைஜீனிக் எதிர்பார்க்க முடியாது என பேசிய அதிகரி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், மாணவிகளின் தேவைகளை உணர்ந்து இந்த அரசு செயல்படும் எனவும் உறுதி அளித்தார்.

