Close Menu
    What's Hot

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஆளுநர் மாளிகை வழியாக ஆட்சி நடத்த முயற்சி?.. பாஜக மீது பாயும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி..!
    தமிழ்நாடு

    ஆளுநர் மாளிகை வழியாக ஆட்சி நடத்த முயற்சி?.. பாஜக மீது பாயும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026Updated:May 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    chinthana-selvan-bjp-imposing-governor-rule-tn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    தமிழகத்தில் கொல்லைப்புறவழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி. தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில்

    @TVKVijayHQ தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா என கேள்வி எழுகிறது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக தவெக செயல்பட்டிருக்க வேண்டும்.

    உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா ? இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும் , கவர்னர் வழியாக பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா? வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர்தீட்டாமல் , அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பெருந்தன்மையாக கருத்துக்களை திரு விஜய் கையாண்டிருக்க வேண்டும்.

    ஆனால் வெற்றிச்செய்தி வந்த மறுக்கணமே மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நாள் என ஆணவத்தையும், பழி வாங்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியது சரிதானா? மோதிலால் நேரு , ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி என அய்ந்தாவது தலைமுறை வாரிசு அரசியலை சுமக்கும் காங்கிரசுடன் கை கோர்த்துக்கொண்டு வாரிசு அரசியலைப் பேசுவதை விட நகைமுரண் வேறேதும் இருக்கமுடியுமா ? திமுகவை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டுள்ள இடதுசாரிகளையும் விசிகவையும் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது.?

    திரு விஜய் அவர்கட்குள்ள கரிஷ்மா அடையாளத்தை , நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசாக்கி முடக்கி வைத்து விட்டு அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக்கொள்ள திரு விஜய்யை பயன்படுத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே திமுக அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சமல்லவா ? விசிக கட்சியில் தலைவர் திருமாவுடன் இருபது பேர் மட்டும் தான் இருக்கிறார்கள்.

    மற்றவர்கள் எல்லாம் எங்கள் ஆட்கள்தான். சிலீப்பர் செல்லாக அங்கே இருக்கிறாரகள் என பேசுவது என்னவகை அரசியல் அறம் ? அரசியல் புரிதலாலும் தனது அன்பாலும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய திரு விஜய் தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்துவைக்கும் ரிசார்ட் அரசியலை கொண்டு வந்திருப்பது ரசிக்கத்தகுந்ததல்ல.

    திரு.விஜய் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையும் தவறான வழிகாட்டலும் தான் தனக்கு ஆதரவு வந்து சேர்வதற்கான வழியை அடைத்து வைத்திருக்கிறது என்பதை உடனே உணரவேண்டும். சனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் மீறி கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக

    @BJP4TamilNadu முயன்று வரும் இந்த சூழலின் ஆபத்தை உணருவதும் அதை தடுத்து தமிழ்நாட்டை காப்பதுதான் மக்கள் முன்னால் உள்ள சவால்.

    என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொல்லைப்புறவழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி. தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
    _____________________________________
    தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் @TVKVijayHQ தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள்… pic.twitter.com/MNABVodFiE

    — Sinthanai Selvan (@sinthanaivck) May 8, 2026
    BJP Criticism TN Chinthana Selvan VCK Governor Power Conflict Governor Rule Tamil Nadu Safeguarding Democracy Tamil Nadu Politics Viduthalai Chiruthaigal Katchi ஆளுநர் அதிகார வரம்பு ஆளுநர் ஆட்சி சிந்தனைச் செல்வன் தமிழ்நாடு அரசியல் பாஜக விமர்சனம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஜனநாயகப் பாதுகாப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!

    June 23, 2026

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Don't Miss

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    வெங்காயம், பூண்டு இல்லாமல் வறுத்து அரைத்த பாரம்பரிய மசாலாவில் மணக்க மணக்கச் செய்யப்படும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி.

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.