Close Menu
    What's Hot

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பண அரசியலுக்கு முற்றுப்புள்ளி.. தமிழக மக்களுக்கு ‘தளபதி’ சொன்ன உருக்கமான நன்றி..!
    தமிழ்நாடு

    பண அரசியலுக்கு முற்றுப்புள்ளி.. தமிழக மக்களுக்கு ‘தளபதி’ சொன்ன உருக்கமான நன்றி..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay thanks voters for historic election victory
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் நிலையில், தற்போது மக்களுக்கு எக்ஸ்தள பக்கத்தில் நன்றியை விஜய் தெரிவித்துள்ளார்.

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

    கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.

    நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் – வருகின்றனர்.

    சிறைக்கைதி மரணம்.. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சோகம்..!

    அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.

    ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று.

    தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

    நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

    கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.

    நடுநிலை…

    — TVK Vijay (@TVKVijayHQ) May 5, 2026

    Tamil Nadu Assembly Election Tamil Nadu Election 2026 results Thalapathy Vijay political win TVK 108 seats TVK single largest party Vijay thanks voters Vijay TVK victory கோலிவுட் செய்திகள் தமிழக அரசியல் மாற்றம் தமிழக தேர்தல் முடிவுகள் 2026 தமிழக வெற்றி கழகம் வெற்றி தவெக 108 இடங்கள் விஜய் தவெக வெற்றி விஜய் நன்றி அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026
    Don't Miss

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    வெங்காயம், பூண்டு இல்லாமல் வறுத்து அரைத்த பாரம்பரிய மசாலாவில் மணக்க மணக்கச் செய்யப்படும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி.

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.