Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!
    கோவை

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026Updated:June 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-idigarai-tasmac-beer-bottle-attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நண்பனுக்காகக் கேட்ட கேள்வி; கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப் பதிவு.கோவை இடிகரை டாஸ்மாக் கடை அருகே, நண்பனுக்காகச் சமாதானம் பேசச் சென்ற வாலிபரை பீர் பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இரண்டு வாலிபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    கோவை, கோவிந்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரின் நண்பர் அசோக் என்பவரை, சென்னமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முகேஷ் (23) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து ராஜ்குமார், முகேஷைத் தொடர்புகொண்டு நியாயம் கேட்டு உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த குற்றவாளிகள் முகேஷ், கடந்த ஜூன் 6-ஆம் தேதி இரவு ராஜ்குமாரை போனில் தொடர்புகொண்டு, இடிகரை டாஸ்மாக் கடை அருகே நேரில் வந்தால் சமாதானம் பேசிக்கொள்ளலாம் என சதித்திட்டத்துடன் அழைத்து உள்ளார்.
    ​இதனை நம்பி அன்று இரவு சுமார் 9:15 மணி அளவில் ராஜ்குமார் இடிகரை டாஸ்மாக் கடை அருகே சென்ற போது, அங்கு கார்த்திகேயன் (25) என்பவருடன் தயாராகக் காத்து இருந்த முகேஷ், ராஜ்குமாரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்து உள்ளார்.

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    “உனது நண்பன் அசோக்குடன் சேர்ந்து கொண்டு என்னைப் பற்றி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் பார்க்கிறாயா ?” எனக் கூச்சலிட்டவாறே, தான் கையில் வைத்து இருந்த பீர் பாட்டிலால் ராஜ்குமாரின் நடுமண்டையில் ஓங்கி அடித்து உள்ளார்.இதில் பலத்த ரத்தக் காயம் அடைந்த ராஜ்குமார் அலறி உள்ளார். சத்தம் கேட்டு சுற்றி இருந்த பொதுமக்கள் ஓடி வருவதைக் கண்ட இருவரும், “இனிமேல் என் விஷயத்தில் தலையிட்டால் உன்னை இந்த பீர் பாட்டிலாலேயே குத்திக் கொலை செய்து விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர்.

    இதை அடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜ்குமார் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அவசரச் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.பின்னர், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடிகரை டாஸ்மாக் பகுதியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு ஜூன் 7-ஆம் தேதி மதியம் நேரில் ஆஜராகி, நடந்த கொடூர சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

    அதன் பேரில், ராமநாதபுரம் கமுதி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முகேஷ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.தலைமறைவாக உள்ள இந்த இரட்டை குற்றவாளிகளை வலைவீசித் தேடும் பணியில் போலீசார் தற்போது தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    Beer Bottle Attack Coimbatore Coimbatore Crime News Coimbatore Police Case Govindanayanpalayam Rajkumar Idigarai Tasmac Fight Local Tasmac Clash Periyanaickenpalayam Govt Hospital இடிகரை டாஸ்மாக் மோதல் கோவை கிரைம் செய்திகள் கோவை செய்திகள் டாஸ்மாக் தகராறு பீர் பாட்டிலால் தாக்குதல் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முகேஷ் கார்த்திகேயன் கைது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.