கோவை துடியலூரில் பொது வழித் தடத்தை தனியார் ஆக்கிரமித்து வீடு மற்றும் கடை கட்டுவதாக கூறி 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு நில அளவையர்கள் இடத்தை அளந்து ஆக்கிரமிக்கப்பட்டதை உறுதிசெய்து ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் உள்ள கட்டிடங்களை அகற்றுமாறு அறிவுறுத்தினர்.
கோவை துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் உள்ள நேரு வீதி பகுதியில் லட்சுமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் அவரது வாரிசுகள் வீடு மற்றும் கடை கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் இடத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான 24 அடி வழித்தடம் உள்ளது. அதில் 6 அடி வரை ஆக்கிரமித்து வீடு மற்றும் கடை கட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.இதற்கு எதிர்ப்பு தெரித்து கடந்த 2014 முதல் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு என அனைவருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே 3 முறை அரசு நில அளவையர்கள் வந்து அளந்து சென்றும் தீர்வு காணத நிலையில் இன்று 4 வது முறையாக அரசு நில அளவையர்கள், மாநகராட்சி நில அளவையர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அப்பகுதியை அளவீடு செய்தனர்.
60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!
தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து இட உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு துடியலூர் காவல் துறையின் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து அரசு நில அளவையர்கள் இடத்தை அளந்து ஆக்கிரமிக்கப்பட்டதை உறுதிசெய்து ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை அகற்றுமாறு அறிவுறுத்தினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தங்கள் வீடுகள் இருக்கு நேரு நகர் பகுதியில் தண்ணீர் லாரி, ஆப்புலன்ஸ், பள்ளி வேன் போன்றவை வர முடிவதில்லை எனவும், அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரவேண்டும் என தெரிவித்தனர்.

