Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்கிறீங்களா?.. தாகம் எடுக்குதுன்னு லிட்டர் கணக்குல குடிக்காதீங்க..!
    ஆரோக்கியம்

    அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்கிறீங்களா?.. தாகம் எடுக்குதுன்னு லிட்டர் கணக்குல குடிக்காதீங்க..!

    Prime ReporterBy Prime ReporterMay 19, 2026Updated:May 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    drinking-excessive-water-in-summer-dangerous
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே வரும் அறிவுரை நிறைய தண்ணீர் குடிங்க என்றுதான் பலரும் கூறுவார்கள். ஆனால், கோடை காலத்தில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறது பல ஆய்வு முடிவுகள்.

    தண்ணீருடன் மோர், ஒஆர்எஸ் கரைசலை அருந்தினால் தான் ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் அளவை ஈடு செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர். கோடையில், அதிகமாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது.

    drinking-excessive-water-in-summer-dangerous

    இதனை ஈடுகட்ட தண்ணீரை மட்டும் அதிகமாக அருந்தினால் போதும் என பலரும் நினைத்து வருகிறோம். அது முற்றிலும் தவறானது. ஏனெனில், நமது உடலில் இருந்து வியர்வை வெளியேறும் போது நீர் சத்து மட்டும் குறைவதில்லை மாறாக சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் வெளியேறுகின்றன. அந்த தருணத்தில் தண்ணீரை அதிகமாக குடிக்கும் போது ரத்தத்தில் இருக்கக்கூடிய சோடியம் அளவு மேலும் குறைந்து ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது.

    drinking-excessive-water-in-summer-dangerous

    அதிகப்படியான நீரால் ரத்தத்தில் உள்ள உப்பு மற்றும் சோடியத்தின் அளவு மிக வேகமாக நீர்த்துப் போகிறது. இந்த நிலைக்கு மருத்துவ அறிவியல் மொழியில் ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) என்று பெயர். வெப்பமண்டல நாடுகளில் கோடை காலங்களில் குழந்தைகள் முதியவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகரிப்பதாக ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

    drinking-excessive-water-in-summer-dangerous

    பொதுவாக, இதனுடைய பாதிப்பு குமட்டல், தலைவலி, தலைசுற்றல், பிதற்றல் நிலை ஆகியவை அதற்கான அறிகுறிகள் ஆகும். அலட்சியத்தினால் மூலை வீக்கம் அடைந்து நினைவிலக்கம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். இதை தவிர்க்க தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகமாக குடிப்பதற்கு பதிலாக இடைவெளி விட்டு காலை முதல் மாலை வரை சீராக அருந்த வேண்டும்.

    drinking-excessive-water-in-summer-dangerous

    அதனுடன் உப்பு கலந்த மோர், கூல், உப்பு சக்கரை கரைசல் போன்றவற்றை அருந்தலாம். கோடை காலம் முடியும் வரை பகல் 12 முதல் மாலை 4 மணி வரை நேரடியாக வெயிலில் பணியாற்றுவதை தவிர்க்கலாம். இயலாத பட்சத்தில் தண்ணீருடன் உப்பு கலந்த பானங்களை அருந்தி ரத்தத்தில் சோடியத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

    வெயில் கொடுமைக்கு வெந்தயம் பெஸ்ட் சாய்ஸா?.. தப்பி தவறியும் இதை மட்டும் பண்ணிடாதீங்க..!

    drinking-excessive-water-in-summer-dangerous

    நம் உடலில் உள்ள சிறுநீரகங்கள் தான் ரத்தத்தை வடிகட்டி, தேவையில்லாத கழிவுகளையும் உபரி நீரையும் சிறுநீராக வெளியேற்றுகின்றன. ஒரு ஆரோக்கியமான சிறுநீரகத்தால் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 0.8 முதல் 1 லிட்டர் வரையிலான தண்ணீரை மட்டுமே வடிகட்ட முடியும். நாம் குறுகிய நேரத்தில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீரகங்கள் ஓய்வில்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, அவற்றின் வடிகட்டும் திறன் பாதிக்கப்படலாம்.

    drinking-excessive-water-in-summer-dangerous

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    ஏற்கனவே சிறுநீரகக் கோளாறு (Kidney Chronic Disease), இதயப் பாதிப்பு அல்லது கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட ஒரு அவுன்ஸ் தண்ணீர் கூட அதிகமாகக் குடிக்கக் கூடாது. ஏனெனில், இவர்களது சிறுநீரகங்களால் தண்ணீரைச் சரியாக வெளியேற்ற முடியாது. நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவு சரியானது தானா என்பதை உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டே அறியலாம். சிறுநீர் வெளிர் மஞ்சள் (Pale Yellow) அல்லது நிறமற்று (Clear) இருந்தால் உங்கள் உடலில் போதிய தண்ணீர் உள்ளது என்று அர்த்தம்.

    drinking-excessive-water-in-summer-dangerous

    தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி, குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதே சிறுநீரகத்திற்கு நல்லது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Drinking excess water summer danger How much water per day Hyponatremia reasons side effects Side effects of drinking too much water Summer health tips Tamil Water intoxication symptoms Tamil அதிக தண்ணீர் குடிப்பதால் ஆபத்து ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் கோடைகாலம் தண்ணீர் அளவு சோடியம் குறைபாடு காரணங்கள் வாட்டர் இன்டாக்ஸிகேஷன் அறிகுறிகள் வெயில் கால ஹெல்த் டிப்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.