தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்த இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்புச் சக்தியை (Immunity) பலமடங்கு அதிகரிக்க உதவுகிறது.
இதில் நார்ச்சத்து (Fiber) அதிக அளவில் இருப்பதால், செரிமானப் பிரச்சினைகள் நீங்குவதுடன், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் இது பெரிதும் உதவுகிறது. கொய்யாப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை (Blood Sugar) சீராகப் பராமரிக்கவும் உதவுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த பழமாகும்.
ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!
கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் சரும செல்களைப் பாதுகாத்து, சுருக்கங்களைத் தடுத்து, முகத்திற்கு இயற்கையான பொலிவையும் இளமையையும் தருகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக் திறனை மேம்படுத்தவும், கண் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
கொய்யாவில் உள்ள மக்னீசியம் தசைகளைத் தளர்த்தி, நரம்புகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கொய்யாப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் சிலருக்குச் செரிமானக் கோளாறுகள் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அளவோடு சாப்பிடுவது சிறந்தது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

