தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு…
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சீரகத் தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 2 (பொடியாக நறுக்கியது) வெங்காயம்
- 4 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய்
- 1 கைப்பிடி கறிவேப்பிலை
- 1/2 கிலோ இறால்
வறுத்து பொடி செய்வதற்கு,
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சோம்பு
தாளிப்பதற்கு,
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
Step 1: இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நாம் கழுவி வைத்த இறாலை சேர்த்து கலந்து மூடி வைக்க வேண்டும்.
Step 2: இறால், ஊறும் நேரத்தில் கடாயில், எண்ணெய் சேர்த்து அதில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து உறலில் போட்டு நன்கு பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
Step 3: தோதை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது காய்ந்தவுடன் நாம் ஊற வைத்த இறாலை அதில் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பின்பு நாம் அரைத்து வைத்திருந்து பொடியை சேர்த்து நன்கு மொறு மொறுப்பு வரும் வரை கிளறி விட்டு இறக்கினால் சுவையான இறால் தொக்கு தயார்.

