தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க அந்த மேஜிக் எண்ணான 118 இடங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸை தொடர்ந்து CPI-யும் CPM -ஆதரவு த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு தருவது ஆதரவு மட்டுமே கூட்டணி அல்ல திமுகவுடன் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிய அரசு அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை கடிதம் மூலம் வழங்கியுள்ளன. இந்நிலையில், ஐ.யூ.எம்.எல் தமிழ்நாடு வெற்றி கழகத்திற்கு ஆதரவு என தெரிவித்துள்ளது.

