கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்று பொதுமக்களால் பெயரிடப்பட்ட ஆண் காட்டு யானை சில ஆண்டுகளாக இப்பகுதியிலேயே சுற்றி வருகிறது அவ்வப்பொழுது வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானை போக்குவரத்து மிகுந்த உதகை சாலையை கடந்து மற்றொரு வனப் பகுதிக்கு சென்று உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்வது வழக்கம்.
இந்நிலையில், உதகை சாலையில் நேற்று இரவு வந்த பாகுபலி யானை தங்கள் விவசாயத்தை அழித்துவிடும் என்று கருதிய அப்பகுதி விவசாயிகள் யானையின் மீது பட்டாசுகளை வீசி எரிந்து யானையை விரட்ட முற்பட்டனர்.
காட்டு வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுதும் அவர்களது எச்சரிக்கையை மீறி காட்டு யானை மீது பட்டாசுகளை சரமாரியாக வீசினர்.
நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!
இது யானையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் பட்டாசு வெடித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

