Close Menu
    What's Hot

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சதக்.. சதக்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: மனைவி போட்ட ஸ்கெட்ச்..!
    கோவை

    சதக்.. சதக்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: மனைவி போட்ட ஸ்கெட்ச்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CBE Death Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை காரில் கடத்தி நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கி கொலை செய்து வாய்க்காலில் வீசிய, கள்ளக் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்கு மார் (40). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், சுல்தான்பேட்டை எஸ்.குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவரை 11 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு சுதிக்ஷன் (9) என்ற மகனும் யக்சிதா ஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக தம்பதியர் பிரிந்து இருந்தனர். சரண்யா குழந்தைகளுடன் குமாரபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    சதீஷ்கு மார் அவ்வப்போது, குமாரபாளையம் சென்று தனது குழந்தைகளை பார்த்து வருவது வழக்கம். இந்த நிலையில், சதீஸ்குமார் கடந்த 3-ம் தேதி மாயமானதாக சரண்யா அளித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில், சதீஸ்குமாரை வதம்பச்சேரி வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் தாக்கி காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, முருகனை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
    போலீசாரின் விசாரணையில் சரண்யாவின் பெரியம்மா மகளான சுகன்யாவின் கணவர் முருகன் என்பதும் முருகனுடன் கடந்த 5 ஆண்டுகளாக சரண்யாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

    மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து தெரிய வர தனது மனைவியையும் முருகனையும் கண்டித்து உள்ளார். இதனால் இருவரும் ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி மதியம் செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் முருகன் தனது நண்பர்கள் கட்டிடத் தொழிலாளிகளான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் (30), வடுகபாளையம் பகுதியைசேர்ந்த சிவலிங்கம் (24) மற்றும் 17 வயது சிறு வன் ஆகியோருடன் மது அருந்தி உள்ளார்.

    அப்போது, சதீஷ்குமார் குமாரபாளையத்தில் உள்ள தனது குழந்தைகளை பார்த்து விட்டு திரும்ப செஞ்சேரிமலை நோக்கி, இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று கொண்டு இருந்தார். இதன் இடையே, சரண்யா தனது கள்ளக் காதலனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சதீஸ்குமார் தன்னிடம் தகராறு செய்ததாக கூறி உள்ளார்.

    இதனால், ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பர்களான கோபிநாத், சிவலிங்கம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நால்வருடனும் எதிரே வந்த சதீஸ்குமாரை வலுக் கட்டாயமாக வழிமறித்து, வாகனத்தில் இருந்து இறக்கி அடித்து காரில் ஏற்றி உள்ளனர். மேலும் தாக்கும் போது, அவரது அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க காரில் பாட்டு சத்தம் அதிகமாக வைத்து உள்ளனர்.

    பின்னர், பெரிய வதம்பச்சேரி PAP வாய்க்கால் பாலம் அருகே காரில் இருந்து சதீஷ்குமாரை இறக்கி வாய்க்கால் அருகே அமர்ந்து மது அருந்திய நால்வரும் சதீஷ்குமாரை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொலை செய்ததோடு, அங்கு உள்ள வாய்க்காலில் உடலை வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை அடுத்து சதீஸ்குமாரின் உடலை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் மூலம் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் நாதேகவுண்டன் பாளையம் பகுதியில் வாய்க்காலில் மிதந்த சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனை அடுத்து சரண்யா அவரது கள்ளகாதலன் முருகன், மற்றும் கோபிநாத், சிவலிங்கம், 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து திட்டமிட்டு கடத்திச் சென்று தாக்கி கொலை செய்ததோடு, உடலை வாய்க்காலில் வீசி விட்டு சகஜமாக ஊருக்குள் சுற்றி வந்ததும், தனது கணவன் மாயமானதாக புகார் அளித்து விட்டு மனைவி நடத்திய நாடகம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    Coimbatore Crime News Crime news Tamil Husband Murder Case Pollachi Murder Case கள்ளக்காதல் கொலை கோவை கொலை வழக்கு பொள்ளாச்சி செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    ஏன் மசோதா நிறைவேறவில்லை?.. பிரதமர் மோடிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் காட்டம்..!

    April 18, 2026

    பிரதமர் மோடி வருகை.. கொடிசியா மைதானத்தில் 5 லட்சம் பேருடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Don't Miss

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    ஏப்ரல் 21, 2026 க்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? முழு விவரம் இதோ.

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.