சினிமா வட்டாரங்களில் அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று விஜய் திரிஷா மற்றொன்று, ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து விவகாரம். ஆர்த்தி ரவி மோகனை 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில், சட்டப்படி விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆர்த்தியுடன் தான் தற்போது வசித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஜோடியாக வந்ததிலிருந்து சர்ச்சைகள் பல வெடிக்க ஆரம்பித்தது.
விஜய் ஜெயித்ததும் மக்கள் மீது திடீர் பாசமா?.. ட்விட்டரில் வைரலாகும் ப்ளூ சட்டை மாறனின் போஸ்ட்..!
அதனை தொடர்ந்து, சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்த கெனிஷா ரவி மோகனிடம் இருந்து நிரந்தரமாக விலகப் போவதாகவும், இனி ரவி மோகன் உங்கள் வசம் என்று வீடியோவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாடகி கெனிஷா தற்போது புதிய பிரச்சினையில் சிக்கி உள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. அவதுறு கருத்து தெரிவித்ததாக தொடங்கப்பட்ட வழக்கில், சர்ஜா நீதிமன்றம் பாடகி கெனிஷாவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 1.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

