Browsing: Coimbatore News
கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடுதிகள் மற்றும் கடைகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் மோசடி வழக்கினர் இணைப்பில் கருத்து, கல்வி கட்டண விவகாரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவியைத் தாக்கி, வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தந்தை உட்பட 3 பேர் கைது; தலைமறைவானவர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை தீவிரம்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தும் கோவை சித்திர சாவடி அணை தூர்வாரப்படாததால் நீரின்றி வறண்டு கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் மதுர காளியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா இன்று நேரில் வந்து தனது குலதெய்வத்தை சாமி தரிசனம் செய்தார்.
வெள்ளியங்கிரி 4-வது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 32 வயது இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் எச்சரித்தும் மீண்டும் மலை ஏறியதால் நேர்ந்த விபரீதத்தால் 7 வயது மகன் தவிப்பு.
கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் கார்த்திகேயன் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வலி நிவாரண மாத்திரைகளை போதையாக பயன்படுத்தும் இந்த விபரீத பழக்கம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மது போதையில் தள்ளாடிய இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கட்டிட வேலைக்கு செல்லும் பெண் என்பது தெரியவந்தது.
