Author: Prime Reporter
திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணாமலை, பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி. கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர். திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை. கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும்.…
கதையை கேட்டு ஓகே சொன்ன ரஜினி, நடிக்க முடியாமல் போனதால் அந்த படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என இயக்குநர்கள் எத்தனையோ பேர் காத்துள்ளனர். அப்படி கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, மற்றொரு வாய்ப்பையும் அந்த இயக்குநர்கள் பெற்றுள்ளனர். ஆனால் இப்போதைய சினிமா காலத்தில், ஏராளமான வித்தியாசமான கதைகளுடன் இளம் இயக்குநர்கள் பலர் சரியான சந்தர்ப்பம் இல்லாமல் காத்து வருகின்றனர். அப்படி தனது படைப்பு மூலம் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் இயக்குநம் அஸ்வத் மாரிமுத்து. ஓ மை கடவுளே என்ற விசித்தியாசமான கதையை கொடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த அவர், அடுத்ததாக டிராகன் என்ற மாபெரும் படைப்பை கொடுத்து ஜென் இசட் தலைமுறையினரை ஈர்த்துள்ளார். காதல், காமெடி, குடும்ப சென்டிமென்ட் என மசாலா திரைப்படமாக கொடுத்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது டிராகன்.…
16 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகை மீண்டும் திரையில் நடிக்க உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 90 மற்றும் 2000ங்களில் இளைஞர்களின் நாடித்துடிப்பாக, கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. விஜயலட்சுமி என்ற பெயர் கொண்டு சினிமாவில் நுழைந்த ரம்பாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது தென்னிந்திய சினிமாத்துறை. கவர்ச்சி, குணச்சித்திர வேடம், நடிப்பு, நடனம் என அனைத்திலும் கைதேர்ந்த வித்தகியான நடிகை ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து தரப்பு நடிகர்களுடன் நடித்து அசத்தினார். 1993ல் உழவன் திரைப்படத்தில் அறிமுகமான அவர், கடைசியாக பெண் சிங்கம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆன அவருக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தது குறிப்படத்தக்கது. தொடை அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரம்பா தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில்,…
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா பற்றிய புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த கொச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் மீண்டும் பேசுபொருளாகி ரசிகர்களிடம் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் புகழ் தாமரை செல்வி சின்ன மருமகள் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ICC Men’s T20 World Cup தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், “பி” பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததே அவர்களின் முன்னேற்ற பாதையில் பெரிய தடையாக அமைந்தது. இன்று நடைபெற இருந்த ஜிம்பாப்வே–அயர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ஜிம்பாப்வேக்கு ஒரு புள்ளி கிடைத்து, மொத்தம் 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதனால் ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு முற்றிலும் நழுவியது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே வெளியேறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2009ஆம் ஆண்டில் மட்டுமே அவர்கள் இவ்வாறு வெளியேறியிருந்தனர். சரிவில் சாம்பியன் அணி 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ICC Cricket World Cup 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய பிறகு, ஐசிசி நடத்திய முக்கிய நான்கு தொடர்களிலும் ஆஸ்திரேலியாவால் சாம்பியன் பட்டத்தை…
தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை பாராட்டியுள்ளார். இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தல பதிவில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், இடைக்கால வேளாண் பட்ஜெட்டை மாண்புமிகு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம். தமிழின தொன்மையை விளக்கும் அருங்காட்சியகங்கள் முதல் நவீன உலகிற்கான செயற்கை நுண்ணறிவு – அறிவுசார் பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் கவனம் செலுத்தி உள்ளது நமது #திராவிடமாடல் பட்ஜெட்! ஏழை-எளிய மக்கள் நலனை மையமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்க முடியாத வளர்ச்சியை தமிழ்நாட்டில் சாத்தியமாக்கி இருக்கும்…
