Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»கொய்யா விதைகள் நண்பனா? எதிரியா?.. இவர்கள் எல்லாம் தப்பி தவறி கூட சாப்பிடக்கூடாது..!
    ஆரோக்கியம்

    கொய்யா விதைகள் நண்பனா? எதிரியா?.. இவர்கள் எல்லாம் தப்பி தவறி கூட சாப்பிடக்கூடாது..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    guava UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கொய்யாவை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பார்கள். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இது ஒரு ஆப்பிளை போலவே உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. கொய்யாவில் வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இருப்பினும், சில நிபுணர்கள் கொய்யாவை அதிகமாக சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்கள்.

    Table of Contents

    • கொய்யாவின் நன்மைகள்
    • செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
    • சிறுநீரகப் பிரச்சனை
    • நீரிழிவு நோயாளிகள்
    • சளி மற்றும் இருமல் உள்ளவர்கள்
    • வயிற்று வலியை ஏற்படுத்தும் கொய்யா விதைகள்

    கொய்யாவின் நன்மைகள்

    guava UTV

    கொய்யாவில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும், ஆரஞ்சு பழத்தை விட கொய்யாவில் நான்கு மடங்கு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு சிறப்பாக செயல்படுகிறது. இதில், நார்ச்சத்து அதிகம் என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது.

    கொய்யாவில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றுகள் எதிர்த்து போராடி செல்களை பாதுகாத்து புற்றுநோயை தடுக்கவும் உதவி புரிகிறது.

    இதைப்போல கொய்யாப்பழத்தில் பல நன்மைகள் இருப்பினும், சில உடல் நல பிரச்சனைகளை பாதிக்கப்பட்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் கொய்யாவை சாப்பிடக்கூடாது யார் அதை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    guava UTV

    செரிமான பிரச்சனை உள்ளவர்கள்

    கொய்யாவில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இதை அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பிரச்சனையை அதிகரிக்கும். இவற்றை சாப்பிடுவது வயிற்றில் வீக்கம், வாயு தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும்.

    குறிப்பாக இரவில் கொய்யா சாப்பிடுவது பிரச்சனைகளை அதிகரிக்கும் என்றே சொல்லலாம். மேலும், கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது பொதுவான செரிமானத்திற்கு நல்லது.

    இருப்பினும், ஏற்கனவே வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் அது செரிமான அமைப்பை பாதிக்கும். மேலும் உங்கள் பிரச்சனைகளை மோசமாக்கும். கொய்யா விதைகள் சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படும்.

    guava UTV

    சிறுநீரகப் பிரச்சனை

    பலர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருவார்கள். அத்தகையவர்கள் கொய்யா சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொய்யாவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்றது அல்ல.

    சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொட்டாசியம் அளவை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் சிறுநீரகங்கள் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாஷத்தை திறக்க வடிகட்ட முடியாது. எனவே, சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் கொய்யா சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் அறிவுரையை கேட்டுக் கொள்வது நல்லது.

    நீரிழிவு நோயாளிகள்

    guava UTV

    இப்போதெல்லாம் பலர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொய்யாவில் இயற்கையான சர்க்கரை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நீங்கள் கொய்யாவை அதிகமாக உட்கொண்டீர்கள் என்றால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் கொய்யாவை குறைவாக சாப்பிடுவது சிறந்தது.

    சளி மற்றும் இருமல் உள்ளவர்கள்

    சாதாரண மக்களுக்கு கொய்யா ஒரு நல்ல பலன் கொடுக்கும். ஆனால், சளி மற்றும் இருமல் போன்ற பருவ கால நோய் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யாவை தவிர்ப்பது நல்லது. குளிர்காலத்தில் அல்லது உங்களுக்கு சளி இருமல் இருக்கும் பொழுது கொய்யா சாப்பிடுவது பிரச்சினையை மேலும் மோசமாகும்.

    ஏனெனில், கொய்யாக் குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளது. எனவே, உங்களுக்கு சளி அல்லது இருமல் இருக்கும் போது சாப்பிடுவது நல்லது.

    வயிற்று வலியை ஏற்படுத்தும் கொய்யா விதைகள்

    guava UTV

    பெரும்பாலான ஆரோக்கியமானவர்ளுக்கு கொய்யா விதைகள் எந்தவிதமான வயிற்று வலியையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக கொய்யா விதைகள் நார்ச்சத்து நிறைந்தவை. இருப்பினும், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக விதைகளை சாப்பிடும் பொழுது, உடலில் அழுத்தம் ஏற்பட்டு லேசான பிடிப்பு உண்டாகலாம். மேலும், விதைகள் செரிக்க அதிக நீர் தேவைப்படும். போதிய நீர் குடிக்கவில்லை எனில், மலம் இறுகி வலியை ஏற்படுத்தலாம். இந்த இரண்டு காரணங்களினால் வேண்டுமானால் சிலருக்கு கொய்யா விதைகள் சாப்பிடும் பொழுது அசௌகரியம் ஏற்படுத்தும்

    கொய்யாவில் உள்ள சில ரசாயனங்கள் காரணமாக சிலருக்கு தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். உங்களுக்கு ஏற்கனவே அதிகரிக்கும் தோல் அலர்ஜி போன்ற தோல் பிரச்சனைகள் இருந்தால், கொய்யா சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது. நீங்கள் தவறுதலாக சாப்பிட்டுவிட்டால் தோல் ஒவ்வாமை, தடிப்பு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளால் அபாயம் ஏற்படும்.

    பச்சை கொய்யா பழங்கள் கடினமானவை பற்கள் அல்லது ஈறு பிரச்சனை உள்ளவர்களுக்கு அவற்றை மெல்லுவதும் கடினமாக இருக்கலாம் மற்றும் வலி அதிகரிக்கலாம்.

    Digestive health problems Guava health benefits Guava side effects Healthy fruits Tamil Vitamin C rich fruits கொய்யாப்பழ தீமைகள் கொய்யாப்பழ நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    முதலிரவு அறையில் மல்லிகைப் பூ அலங்காரம்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..!

    June 12, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    June 2, 2026

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    June 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.