Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!
    ஆரோக்கியம்

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    Prime ReporterBy Prime ReporterJune 9, 2026Updated:June 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thyroid-symptoms-causes-diet-control-tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அதிகரித்து வரும் உணவு மாற்றங்களால் பலருக்கும் தைராய்டு தொந்தரவு ஏற்படுகிறது. பொதுவாக, பெண்களிடையே இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. தைராய்டு என்பது கழுத்து பகுதியில் இருக்கும் சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உடலின் மெட்டபாலிசம் ஆற்றல் உற்பத்தி இதயத்துடிப்பு உடல் வெப்பநிலை மற்றும் பல ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த சுரப்பி சரியாக செயல்படாத போது உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படலாம். இந்த தைராய்டு, பிரச்சனையை உடலில் எப்படி எல்லாம் பாதிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள்

    ஹைப்போதைராய்டிச பிரச்சனையின் அறிகுறிகள், உடல் எடை அதிகரித்தல், உடல் சோர்வு, தோல் உலர்தல், முடி உதிர்தல், மலச்சிக்கல், மனச்சோர்வு, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், குளிரை தாங்க முடியாமை ஆகியவை அடங்கும்.

    ஹைப்பர் தைராய்டிசம் அறிகுறிகள்

    ஹைப்பர் தைராய்டிச பிரச்சனையின் அறிகுறிகள், உடல் எடை குறைதல், பதட்டம், இதய துடிப்பு அதிகரித்தல், அதிக வியர்வை, கை நடுக்கம், தூக்கமின்மை அதிக வெப்பத்தை தாங்க முடியாமை போன்றவை இடம்பெறும்.

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    உடலை பாதிக்கும் தைராய்டு பிரச்சனை

    தோல், செரிமானம், கருத்தரிப்பு திறன் போன்றவை தைராய்டு மாற்றங்களால் பதிப்படைகிறது. மனநலம் மற்றும் இதய ஆரோக்கியத்தையும் தைராய்டு பாதிக்கக்கூடும். பெண்களில் சிகிச்சை பெறாமல் விடப்படும் விடப்படுபவர்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதுடன் கர்ப்ப கால சிக்கல்களையும் ஏற்படுத்தும். மேலும், சிகிச்சை பெறாத தைராய்டு கோளாறுகள் அதிக கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் எலும்பு மொழிதல் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

    thyroid-symptoms-causes-diet-control-tips

    தைராய்டை எப்படி கட்டுப்படுத்துவது?

    தைராய்டு உள்ளவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சமநிலையான உணவு முறை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தும். குறிப்பாக ஹைபோ தைராய்டிசம் உள்ளவர்கள் அயோடின், செலினியம், சிங்க், இரும்புச்சத்து, நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.

    மீன், முட்டை, பருப்புகள், பால் பொருட்கள் மற்றும் பச்சை காய்கறிகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இதனுடன் தொடர்ந்து, உடற்பயிற்சி செய்வதன் மூலமும் போதிய தூக்கத்தை பெறுவதன் மூலம் மன அழுத்தம் கட்டுப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதை அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதையும் தவிர்ப்பது சிறந்தது.

    ஆரம்ப காலகட்டத்தில், தைராய்டு பிரச்சினைகளை கண்டறிந்தால் விரைவில் சரி செய்ய முடியும். காரணம் இன்றி உடல் எடை மாற்றம் தொடர்ந்து சோர்வு அல்லது முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு ஹார்மோன் பரிசோதனை செய்து கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    best diet for thyroid control health and wellness tips Tamil hyperthyroidism weight loss causes hypothyroidism weight gain remedies iodine selenium rich foods thyroid thyroid hormone test profile cost Thyroid symptoms in women Tamil ஆரோக்கியமான வாழ்வியல் நலம் 2026 தைராய்டு அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் தைராய்டு கட்டுப்பட உணவு முறைகள் தைராய்டு வரக் காரணம் என்ன தைராய்டு ஹார்மோன் பரிசோதனை பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு நீங்க ஹைப்போதைராய்டிசம் உடல் எடை அதிகரிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.