ராகி இடியாப்பம் (கேழ்வரகு இடியாப்பம்) தயாரிப்பது ஆரோக்கியமானது மட்டுமல்ல, சுவையானதும்கூட.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு – 1 கப்
- அரிசி மாவு – 1/4 கப் (பிணைப்பதற்கு வசதியாக)
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 1 டீஸ்பூன் (மாவு ஒட்டாமல் இருக்க)
செய்முறை
Step 1: ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரை மாவின் மேல் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறவும். மாவு கையில் தொடும் சூட்டிற்கு வந்ததும், சிறிது எண்ணெய் தடவி மென்மையாகப் பிசைந்து கொள்ளவும்.
Step 2: இடியாப்ப அச்சில் சிறிதளவு எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் மாவை உள்ளே வைக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் அல்லது தேங்காய்ப்பூ தூவி, அச்சைக் கொண்டு இடியாப்பத்தைப் பிழியவும்.
கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!
Step 3: இட்லிப் பாத்திரத்தில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி இடியாப்பம் தயார்! இதைத் தேங்காய்ப்பால் அல்லது ஏதேனும் காரமான குருமாவுடன் பரிமாறலாம்.

