‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்குகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் புகார்கள் அல்லது ரகசியத் தகவல்களைத் தெரிவிக்கச் பிரத்யேக மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வழக்குகள் தொடர்பாகத் தங்களது புகார்களைத் தெரிவிக்கவோ அல்லது முக்கியத் தகவல்களைப் பகிரவோ 9345319676 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவும் தகவல்களை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் முழுமையாக இரகசியமாக வைக்கப்படும் என்றும், பெறப்படும் அனைத்துத் தகவல்களும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!
முன்னதாக, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜெம் கிரானைட்ஸ்’ வீரமணி மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில், தமிழக காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு (SIT) தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து புகார்களைப் பெறுவதுடன், இவ்வழக்குடன் தொடர்புடைய கூடுதல் விவரங்கள் மற்றும் சாட்சியங்களைச் சேகரிக்கக் காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் யாரும் தயக்கமின்றிப் புகார்களை அளிக்கும் வகையிலும், துப்பு துலக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் 9345319676 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும், புகார்களின் மீது உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

