தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகை தந்துள்ளார். விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவருக்குத் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் உற்சாக வரவேற்பு அளித்தது. மதுராந்தகம் மற்றும் இதர மாவட்டங்களில் தீவிர அரசியல் களப்பணிகள் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் அவர், தற்போது மதுரை வருகை தந்துள்ளது அரசியல் வட்டதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி அருங்காட்சியகத்தின் புதுப்பிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட உள்ளார். மேலும், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!
விஜயின் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் தவெக கொடிகளுடன் தொண்டர்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை தரப்பிலிருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

