வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் தேசிய விருதுகளை அள்ளிய ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. முதல் படமே மெகா ஹிட் அடித்ததால் கோலிவுட்டில் இவருக்குப் பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில படங்களில் மட்டுமே நடித்தார்.
‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’ போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும், தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையாததால், பாலிவுட் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். அங்கே ‘பிங்க்’ படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்ததுடன், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக்கான ‘சபாஷ் மிது’ படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
சினிமா வாழ்க்கையில் பிஸியாக வலம் வந்த டாப்சி, டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர் மத்யாஸ் போவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் கணவர் குறித்துப் பேசியுள்ள அவர், “ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதைதான் உறவின் முக்கிய பலம். பாலிவுட்டில் நுழைந்தபோதுதான் அவருடன் எனக்குக் காதல் மலர்ந்தது.
சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!
இத்தனை ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்; என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த மற்றும் திருப்தியான முடிவு மத்யாஸைத் தேர்ந்தெடுத்ததுதான். சினிமாவில் பல விஷயங்கள் தற்செயலாக அமைந்தாலும், மத்யாஸை நானே தேர்ந்தெடுத்தேன் என்பதால் பெருமைப்படுகிறேன்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

