தமிழ் சினிமாவில் ‘தடையறத் தாக்க’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அயலான்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது கணவர் ஜாக்கி பாக்னானி குடும்பத்தினருக்குச் சொந்தமான பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ‘பூஜா என்டர்டெயின்மென்ட்’ மற்றும் ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ உரிமையாளர் குமார் மங்கத் பாதக் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மும்பை முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்தச் சோதனை பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!
திரைப்படத் தயாரிப்பு, வெளிநாட்டு விநியோகம் மற்றும் படப்பிடிப்புகளின் பெயரில் கணக்கில் வராத பல கோடி ரூபாயைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும், இதன் மூலம் மாபெரும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் வந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை நீடித்த இந்தச் சோதனையின் போது பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மேலும், ஏற்கனவே ரகுல் ப்ரீத் சிங்கின் குடும்பத்தினருடன் தொடர்புடைய சில முந்தைய போதைப்பொருள் மற்றும் பண மோசடி வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக, இந்த நிதி முறைகேடுகளுக்குப் பின்னால் சர்வதேச அளவிலான நெட்வொர்க் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறை (IT) அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் வாசு பாக்னானியின் மகன் ஜாக்கி பாக்னானியைத் திருமணம் செய்துள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் குடும்பத்திற்குச் சொந்தமான ‘பூஜா என்டர்டெயின்மென்ட்’ மற்றும் ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ குமார் மங்கத் பாதக் ஆகியோருக்குச் சொந்தமான 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை பெயரில் கணக்கில் வராத பெருந்தொகையை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக வந்த புகாரே இதற்குக் காரணம்.
ஏற்கனவே ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் மீதான போதைப்பொருள் வழக்கு விசாரணை வளையத்தில் இருந்த நிலையில், இந்த ஐடி ரெய்டின் பின்னணியில் சர்வதேச அளவிலான பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

