சட்டப்பேரவையில் மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கோரிக்கை மற்றும் முதலமைச்சர் விஜய்யின் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுமானத் திட்ட முயற்சிகளைக் கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியது போல, தமிழக அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தேவையில்லை என்று முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!
மேலும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், தமிழகத்தின் உரிமைகள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்படாது என்றும், இதுதொடர்பாகப் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் மூலம் அரசின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.

