தீபம் ஏற்றியதால் நேர்ந்த விபரீதம்! பொள்ளாச்சியில் பூட்டிய வீடு பற்றி எரிந்து சாம்பல்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்காளக்குறிச்சி பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் என்பவர், இன்று தனது வீட்டில் சாமி கும்பிட்டுத் தீபம் ஏற்றி வைத்துள்ளார். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், எதிர்பாராத விதமாகத் தீ வீடு முழுவதும் பரவி எரியத் தொடங்கியது.
பெற்றோர்கள் கதறல்.. விடுதி அறையில் மாணவி தற்கொலை..!
வீட்டின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாகக் காவல் துறைக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியோடு தீயை அணைத்துக் கட்டுப்படுத்தினர்.

