‘கட்டா குஸ்தி 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது திருமணம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். திருமண அமைப்பில் பல சிக்கல்கள் இருப்பதாக நம்பியதால், நீண்ட காலமாகத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமல் இருந்தார்.
‘கட்டா குஸ்தி 2’ படப்பிடிப்பின் போது ஒரு குழந்தையுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தக் குழந்தையுடனான பிணைப்பு, தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்ற தாய்மை உணர்வை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
என் மனம் அழுது ஓயட்டும்.. : குருவின் நினைவுகளுடன் கண்ணீர் விட்ட பார்த்திபன்..!
தனது குழந்தையை முழுப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளும், ஒரு நல்ல தந்தையாக இருக்கக்கூடிய ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காகத் திருமணம் என்பதை ஒரு சட்டப்பூர்வமான உறவாகக் கருதுவதாகக் கூறியுள்ளார். தான் கூறிய கருத்துகளைத் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வதை ஆதரிப்பதாகத் தவறாகச் சித்தரித்தது வருத்தமளிப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார். தனது எண்ணங்கள் வாழ்க்கை அனுபவத்தால் மாறியுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

