நடிகை சமந்தா சோனி லிவ் (SonyLIV) தளத்துடன் இணைந்து புதிய புராஜெக்ட் ஒன்றில் பணியாற்றவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையிலும், ஓய்வெடுக்காமல் சோனி லிவ் ஓடிடி தளத்துடன் இணைந்து புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது ஒரு வெப் சீரிஸா அல்லது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதா என்பது குறித்த விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்யாணம் வேண்டாம் ஆனா.. இப்போ அதுக்காக மனசை மாத்திக்கிட்டாங்களாம்..!
“மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், புதிய தொடக்கங்களை வரவேற்கவும் இந்த வருடம் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. சோனி லிவ் தமிழுடன் இணைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சுவாரஸ்யமான ஒரு புராஜெக்டுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம், அதன் விவரங்களை விரைவில் பகிர்கிறேன்” என்று கூறியுள்ளார். கர்ப்பமாக இருப்பதால், இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சமந்தா கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க ப்ளீஸ் என்று கூறி வருகிறார்கள்.

