‘அட்டகத்தி’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பா. ரஞ்சித் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘வேட்டுவம்’. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
ஆரம்பத்தில் அட்டகத்தி தினேஷை வைத்து வெறும் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சிறிய படமாகத் தொடங்கப்பட்ட இப்படம், பின்னர் ஆர்யாவும் இணைந்துள்ள நிலையில் தற்போது 75 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வளர்ந்துள்ளதாக நடிகர் ஆர்யா மேடையில் மனம் திறந்துள்ளார்.
எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!
மேலும், ‘தங்கலான்’ படம் மக்கள் மத்தியில் சென்றடைவதில் ஏற்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி, அதை ‘வேட்டுவம்’ படத்தில் சரி செய்ய வேண்டும் என ரஞ்சித் பேசியதை எண்ணி அவரது ஈகோ அற்ற தன்மையை ஆர்யா வியந்து பாராட்டினார். இப்படம் வெற்றிபெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்ட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

