சட்டசபையிலிருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
முதல்வர் பேசிய 30 நிமிட உரையில் குறைந்தது “10 ரீல்ஸ் தேறும்” என்று கிண்டலடித்த அவர், சட்டமன்றத்தை ஒரு சினிமா தியேட்டர் போல மாற்றிவிட்டதாகவும், ஸ்கிரிப்ட் முடியும் வரை யாரும் ‘கட்’ சொல்லக் கூடாது என்பது போல முதல்வர் செயல்படுவதாகவும் சாடினார்.
அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!
முன்னதாக, 2021-ல் கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது அவையில் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி பதிலளித்தார்.
குடியரசுத் தலைவர் பேரவைக்கு வரும்போது தனி புரோட்டோகால் (நெறிமுறை) படி இருமுறை தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று விளக்கிய அவர், “ஒரு அடிப்படை புரோட்டோகால் கூட முதலமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது” என்று விமர்சித்தார்.

